வணிகம்
தொழில்முயற்சியாளர்களை ஆதரிக்கும் வகையில் கொழும்பில் 3 ஆவது தடவையாக SME வர்த்தக கண்காட்சியை நடத்திய கொமர்ஷல் வங்கி

Apr 22, 2025 - 11:48 AM -

0

தொழில்முயற்சியாளர்களை ஆதரிக்கும் வகையில் கொழும்பில் 3 ஆவது தடவையாக SME வர்த்தக கண்காட்சியை நடத்திய கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியானது அண்மையில் கொழும்பில் நடத்திய கண்காட்சி ஒன்று சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது. இதற்கிணங்க கொழும்பில் கொமர்ஷல் வங்கி ஏற்பாடு செய்த ஒரு தனித்துவமான வர்த்தக கண்காட்சியில் இலங்கை முழுவதிலுமிருந்து சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 200 தொழில்முயற்சியாளர்கள் தமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் இந்த கண்காட்சியானது வழிவகுத்தது. 

BMICH இல் உள்ள நுகசெவன வில் நடைபெற்ற மூன்று நாள் கண்காட்சியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிசார் (SMEs) வர்த்தகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரங்குகள் நிறுவப்பட்டிருந்தன. இதில் SME மற்றும் நாட்டின் விவசாயத் துறைக்கு சேவைகளை வழங்கும் பல நிறுவனங்களும் பங்கேற்றன, அதே வேளை தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI) மற்றும் தேசிய பொறியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERDC) ஆகியவை இந்த நிகழ்வில் அவற்றின் சொந்த அரங்குகளைக் கொண்டிருந்தன. 

கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு கொமர்ஷல் வங்கி, பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை அபிவிருத்தி சபை (IDB)இ ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB), இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை (SLSEA) மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) போன்ற அரசாங்க நிறுவனங்கள் இணைந்து தொழில்துறை உதவி நிலையம் ஒன்றினை இங்கு அமைத்திருந்தன. 

தொழில்முயற்சியாளர்களுக்கு உதவி மற்றும் ஆதரவினை வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கி ஏற்பாடு செய்திருந்த SME வர்த்தக கண்காட்சியின் மூன்றாவது கண்காட்சி நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

வங்கி SME துறைக்கு வழங்கும் முக்கியத்துவத்தை நிரூபிக்கும் வகையில், ளுஆநு வர்த்தக கண்காட்சியில் கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திரு.சனத் மனதுங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு.எஸ். பிரபாகர் மற்றும் கூட்டாண்மை முகாமைத்துவ அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். IDB இன் தலைவர் திரு. ரவி நிஷங்க, இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அபிவிருத்தித் துறை பணிப்பாளர் திரு.சத்துர ஆரியதாச, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிரதம வதிவிட அதிகாரி திரு. விக்டர் அந்தோணிப்பிள்ளை மற்றும் ADB இன் சிரேஷ்ட நிதியியல் பிரிவு நிபுணர் திருமதி. மனோஹரி குணவர்தன உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் மற்றும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். AIA, Hayleys Solar, Hayleys Agriculture மற்றும் DIMO Agri Business ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது. வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05