செய்திகள்
சிறி தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

Apr 22, 2025 - 01:49 PM -

0

 சிறி தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

சிறி தலதா வழிபாட்டிற்காக அதன் வளாகத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளது.


பொலித்தீன் உள்ளிட்ட உக்காத திண்மக் கழிவுப் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்கவும், தலதா மாளிகை சுற்றுப்புறத்தின் தூய்மையை பேணுவதற்கு மிகுந்த கவனம் செலுத்தவும் பக்தர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், குப்பைகளை அதற்குரிய இடங்களில் மட்டுமே கொட்டுவதற்கு கூட்டாக பங்களிப்பு செய்து, பொறுப்புள்ள குடிமக்களாக தமது கடமையை நிறைவேற்றுமாறு "கிளீன் ஸ்ரீ லங்கா" திட்டத்தின் மூலம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு நினைவூட்டியுள்ளது.


நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன் அரசாங்கத்தின்  பிரதான திட்டமாக "கிளீன்  ஸ்ரீ  லங்கா" திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது


குப்பைகள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், குப்பைகளை முறையாக அகற்றும் நல்ல பழக்கத்தை சமூகத்தில் பரவலாக்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன் ஆரம்பமான சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்து, சிறி தலதா மாளிகை வளாகத்தை மையமாகக் கொண்டு, "கிளீன் ஸ்ரீ லங்கா" திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05