Apr 22, 2025 - 05:49 PM -
0
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் ஆன்மா நிம்மதிக்காக முழு மனதுடன் பிரார்த்தனை செய்யுமாறு, கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைத்து இலங்கையர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நித்திய இளைப்பாறிய திருத்தந்தைக்கு இரங்கல் செய்தி ஒன்றை வௌியிட்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த வேண்டுகோளை முன்வைத்த கர்தினால், அனைத்து கத்தோலிக்க குருக்கள் மற்றும் சபையின் ஏனைய தலைவர்களையும், திருத்தந்தையின் ஆன்மா நிம்மதிக்காக தேவையான பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
நித்திய இளைப்பாறிய திருத்தந்தை இலங்கை மீது கொண்டிருந்த அன்பையும் மரியாதையையும் நினைவு கூர்ந்த கர்தினால், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, திருத்தந்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், அவர்களுக்காக தீவிரமாக பிரார்த்தனை செய்ததாகவும் குறிப்பிட்டார்.

