Apr 22, 2025 - 06:44 PM -
0
சிறந்த, உயர்தர, நெறிமுறைப்படி பெறப்பட்ட இறைச்சிகளை எளிதாகவும் வசதியாகவும் அனுபவிக்கும் நோக்கில், New Anthoneys இன் முதன்மையான இறைச்சி பல்பொருள் அங்காடியான மீட்லரி, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் தள மற்றும் விநியோக கட்டமைப்பான PickMe உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கைகோர்ப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள நுகர்வோர் பாராட்டப்பட்ட ஹரிதாஹரி கோழி உட்பட Meatlery இன் பிரீமியம் அளவிலான அன்ரிபயோடிக் இல்லாத கோழி இறைச்சித் தயாரிப்புகளை நேரடியாக தங்கள் வீடுகளுக்கு வசதியாக ஓடர் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியாளரான New Anthoneys குழுமத்தின் ஒரு பகுதியான Meatlery, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாமல் வளர்க்கப்படும் பல்வேறு வகையான இறைச்சிகளை வழங்குகிறது. அவற்றில் அவர்களின் மிகவும் விரும்பப்படும், விருது பெற்ற பதப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் அடங்கும். இது சமீபத்தில் 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பிரிவில் மதிப்புமிக்க சிறந்த ஏற்றுமதியாளர் விருதைப் பெற்றது. அதனூடாக நுகர்வோர் ஆரோக்கியமான மற்றும் சுவையான தயாரிப்புகளை அனுபவிப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் முதன்மையான ஹரிதாஹரி கோழி இறைச்சி, பண்ணை முதல் மேசை வரை, இலங்கையின் முதல் உண்மையான அன்ரிபயோடிக் இல்லாத கோழி இறைச்சியாகும். இது விவேகமுள்ள நுகர்வோருக்கு ஆரோக்கியமான தெரிவுகளை வழங்குகிறது. Meatlery இல் உள்ள தயாரிப்புகளின் வரிசை கவனமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
அன்ரிபயோடிக் இல்லாத ஹரிதாஹரி கோழி இறைச்சி, பிரீமியம் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, சொசேஜ்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் முட்டைகளை வழங்குகிறது. இதில் Crizzpys, Frenchys, Crustys போன்ற அதன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்புத் தெரிவுகளும் அடங்கும். இவை அனைத்தும் சுவை மற்றும் ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டன. நிலையான கோழி உற்பத்தியில் நம்பகமான பெயரான New Anthoneys குழுமத்தின் ஒரு பகுதியாக, Meatlery தரம் மற்றும் புதுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது.
இந்த கைகோர்ப்பின் மூலம், நுகர்வோர் தடையற்ற மற்றும் நம்பகமான விநியோக அனுபவத்தை எதிர்பார்க்கலாம். PickMe இன் பயனர் நட்பு தளம் வாடிக்கையாளர்கள் Meatlery இன் தயாரிப்பு சலுகைகளை எளிதாக உலாவவும், ஓடர்களை வழங்கவும், விநியோகங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு கொள்முதல் செயல்முறையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், நுகர்வோர் தாமதமின்றி புதிய, உயர்தர இறைச்சிகளைப் பெறுவதையும் உறுதி செய்கிறது. Meatlery மற்றும் PickMe இடையேயான இந்தக் கூட்டாண்மை, புதுமை, நிலைத்தன்மை மற்றும் நுகர்வோர் திருப்தி ஆகியவற்றிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. அவர்களின் பலங்களை இணைப்பதன் மூலம், இறைச்சித் துறையில் புதிய தரநிலைகளை அமைப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். நுகர்வோருக்கு ஆரோக்கியமான உணவு விருப்பங்களையும் இணையற்ற வசதியையும் வழங்குகின்றன.
New Anthoney’s குழுமத்தின் கீழ் உள்ள ஆடம்பரமான இறைச்சி பல்பொருள் அங்காடியான Meatlery, தனது தடத்தை விரிவுபடுத்தி, புத்திசாலித்தனமான இறைச்சி பிரியர்களுக்கான ஷொப்பிங் அனுபவத்தை மறுவரையறை செய்துள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தின் மிக உயர்ந்த தரநிலைகளுக்கான அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்ற New Anthoney’s, ஒவ்வொரு தயாரிப்பின் தூய்மை மற்றும் தரத்தையும் கடுமையாக சோதிக்கும் அதன் உலகத் தரம் வாய்ந்த நுண்ணுயிரியல் ஆய்வகத்தைப் பற்றி பெருமை கொள்கிறது.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் பிரீமியம், நெறிமுறைப்படி தயாரிக்கப்பட்ட இறைச்சிகளைப் பெறுவது மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பின் உத்தரவாதத்தையும் இது உறுதி செய்கிறது. Meatlery இன் நட்பு மற்றும் அறிவுள்ள வாடிக்கையாளர் சேவை குழு அனுபவத்தை மேம்படுத்துகிறது. நிபுணர் ஆலோசனை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கவனத்தை வழங்குகிறது. இது இறைச்சி ஷொப்பிங்கிற்கான ஒரு தனித்துவமான இடமாக அமைந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவு வர்த்தக நாமங்களின் வரிசையுடன் சேர்ந்து, Anthoney’s, ஊட்டச்சத்து நிறைந்த, அன்ரிபயோடிக் இல்லாத மற்றும் சுவையான இறைச்சி தயாரிப்புகளை வழங்குவதில் பிரபலமான ஒரு நம்பகமான வீட்டுப் பெயராக வளர்ந்துள்ளது. PickMe உடனான சமீபத்திய கூட்டாண்மை, வாடிக்கையாளர்கள் Meatlery இன் வரிசையிலிருந்து வசதியாக ஓடர் செய்து, அதை நேரடியாக அவர்களின் வீட்டு வாசலுக்கு விநியோகித்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த ஒத்துழைப்பு, Meatlery இன் வசதி, புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இது நுகர்வோர் இலங்கையில் சிறந்த இறைச்சிகளை அணுகுவதை முன்னரை விட மேலும் எளிதாக்குகிறது.

