செய்திகள்
தபால் வாக்காளர்களுக்காக 'ஈ' சேவை வசதி

Apr 23, 2025 - 08:09 AM -

0

தபால் வாக்காளர்களுக்காக 'ஈ' சேவை வசதி

தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்தும் இடம் மற்றும் சான்றளிக்கும் அதிகாரியை அடையாளம் காண உதவும் வகையில் 'ஈ' சேவை ஒன்று நடைமுறையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அவர்களின் குழுக்கள் மற்றும் கட்சிகளையும், அவர்களின் சின்னங்களையும் அடையாளம் காண எளிதாக்கியுள்ளது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


eservices.elections.gov.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து  தேர்தல் 'ஈ' சேவையை அணுக முடியும் எனவும் அதில் அரச அதிகாரிகளுக்கான தபால் வாக்களிப்பு தகவல்களுக்கான இணைப்பை அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05