Apr 23, 2025 - 12:11 PM -
0
மீண்டெழும் திறன், வியாபார தொடர்ச்சி, புத்தாக்கம், பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டு சிறப்பு ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை உறுதி செய்து சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), இலங்கையில் வியாபார தொடர்ச்சி முகாமைத்துவத்துக்காக ISO 22301:2019 சான்றிதழைப் பெற்றுக் கொண்ட முதலாவது வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது. தகவல் பாதுகாப்புக்கான நீண்ட கால அர்ப்பணிப்பின் அடிப்படையில் CDB இன் இந்த மைல்கல் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், 2024 செப்டெம்பர் மாதத்தில் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான ISO 27001:2022 மீள் சான்றிதழை வெற்றிகரமாக பெற்றுள்ளது. ஆறு வருடங்களாக பேணியிருந்த, ஏற்கனவே நிறுவனம் பெற்றிருந்த ISO 27001:2013 சான்றிதழிலிருந்து இது மேம்படுத்தப்பட்ட சான்றிதழாகவும் அமைந்துள்ளது. இந்தச் சான்றிதழ்களுடன், நிதித் துறையில் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டு நியமங்கள் போன்றவற்றில் CDB புதிய நியமத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு செயற்பாடுகள் தடங்கலின்றி தொடரும் என்பதற்கான உறுதி மொழியையும் வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழ் தொடர்பில் CDB இன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி ஷவிந்திர பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “CDB இல் பாதுகாப்பு மற்றும் மீண்டெழும் திறன் போன்றன எமது செயற்பாடுகளின் அடிப்படையாக விடயங்களாக அமைந்துள்ளன. ISO 27001 மற்றும் ISO 22301 ஆகிய சான்றிதழ்களை பெற்றுள்ளமையானது, வாடிக்கையாளர் தரவுகளை பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளதுடன், வியாபார தொடர்ச்சித் தன்மையை பேணுகிறது. மேலும், நம்பிக்கை வாய்ந்த நிதிச் சேவைகள் வழங்கும் பங்காளர் எனும் எமது நிலையை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் முன்னோடியான வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில் CDB, தொடர்ச்சியாக சர்வதேச நியமங்களை எய்துவதில் தனது அர்ப்பணிப்பை பேணி வருவதுடன், தொழிற்துறையின் போக்குகளை பின்பற்றி அதில் முன்னிலையில் திகழ்வதிலும் கவனம் செலுத்துகிறது. ஆளுகை மற்றும் ஒழுக்கச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கான நிறுவனத்தின் வழிமுறையினூடாக, சகல பங்காளர்களுக்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குவிதிமுறைகளையும், இதர சம்பந்தப்பட்ட கணக்கீட்டு மற்றும் ஆளுகை நியமங்களையும் பின்பற்றி செயலாற்றும் CDB, பாதுகாப்பான, தங்கியிருக்கக்கூடிய சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், வாடிக்கையாளர் தரவு மற்றும் தகவல்கள் உயர் மட்டத்தில் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்கின்றது.
ஐக்கிய நாடுகள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கமைய தனது நிலைபேறாண்மை மூலோபாயத்தை CDB பேணியுள்ளதுடன், அதில் மீட்சியுடனான உட்கட்டமைப்பு, புத்தாக்கத்தை ஊக்குவிப்பு மற்றும் நிலைபேறான தொழிற்துறையை கட்டியெழுப்பல் போன்றவற்றைக் கொண்ட SDG 9ஐயும் பின்பற்றுகிறது. இந்த நியமங்கள், செயன்முறைகள் மற்றும் கட்டமைப்புகள் பின்பற்றப்படும் நிலையில், பரந்த நிலைபேறாண்மை இலக்குகளுக்கு பங்களிப்பு வழங்க CDB முன்வந்துள்ளது. இந்த சான்றிதழ்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதற்கமைய, CDB தொடர்ந்தும் தொழினுட்பவியல்சார் மீட்சி மற்றும் செயற்பாட்டு சிறப்பு ஆகயிவற்றில் முன்னிலை வகிக்கிறது. வாடிக்கையாளர் தன்னிறைவு மற்றும் தொழினுட்பசார் புத்தாக்கம் போன்றவற்றில் நிறுவனத்தின் தொடர்ச்சியான கவனம் செலுத்துகையினூடாக, பங்காளர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் நிறுவனம் கொண்டுள்ள அக்கறை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
CDB பற்றி – சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), இலங்கையின் சிறந்த நான்கு மாபெரும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதுடன், நிதிச் சேவைகளில் புத்தாக்கம், நிலைபேறாண்மைக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த கூட்டாண்மை ஆளுகையை பின்பற்றுகின்றமை ஆகியவற்றை பின்பற்றுகின்றமைக்காக புகழ்பெற்றுள்ளது. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் பொருந்தும் வகையிலான நவீன டிஜிட்டல் தீர்வுகளினூடாக, டிஜிட்டல் மாற்றியமைப்பு பணிகளில் CDB’இன் நோக்கு என்பது நிதிச் சேவைகள் கட்டமைப்பில் தொடர்ச்சியாக மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

