Apr 23, 2025 - 12:24 PM -
0
JXG (ஜனசக்தி குழுமம்) பன்முகப்படுத்தப்பட்ட குழும நிறுவனங்களுக்கான சிறந்த முகாமைத்துவ செயற்பாடுகள் நிறுவனம் (BMPC) 2025 விருதை சுவீகரித்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை இலங்கை பட்டய நிபுணத்துவ முகாமையாளர் நிறுவகத்தினால் (CPM ஸ்ரீ லங்கா), வினைத்திறனான முகாமைத்துவ மூலோபாயங்களினூடாக வியாபார நிலைபேறாண்மை மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்காக நிறுவனங்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒழுங்கமைக்கப்பட்ட, அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி முன்னேற்றகரமான பணியிட கலாசாரத்தை JXG நிறுவியுள்ளமையை குறிக்கும் வகையில், பணியிட உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் குழுமம் காண்பிக்கும் முயற்சிகளை உறுதி செய்யும் வகையில் BMPC விருது அமைந்துள்ளது.
Mireka டவர்ஸ்க்கு குழுமம் மாற்றப்பட்டதிலிருந்து, JXG இனால் திறந்த அலுவலக முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், ஊழியர்களின் ஈடுபாடு மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்புக்காக இணைந்து செயலாற்றக்கூடிய ஹைபிரிட் பணிச் சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. இணைந்த செயற்பாடு, ஆக்கத்திறன் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை உக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட JXG இன் பணியிட மாற்றியமைப்பு திட்டத்தின் வெற்றிகரமான பூர்த்தியை இந்த விருது எடுத்துக்காட்டுகிறது.
JXG இன் குழும பிரதம மனித வளங்கள் அதிகாரி வசந்தி ஸ்டீபன் இந்த கௌரவிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த கௌரவிப்பை பெற்றுக் கொண்டதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இணைந்த பணிச்சூழலை கட்டியெழுப்பும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் JXG ஐச் சேர்ந்த எமது அணியினரின் திரண்ட முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. ஒப்பற்ற கைகோர்ப்புக்கான தொடர்ந்த முயற்சி, புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் எமது முகாமைத்துவ செயற்பாடுகளில் சிறப்பை பேணல் ஆகியவற்றை இந்த கௌரவிப்பு ஊக்குவிக்கிறது.” என்றார்.
ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக புதிய சிந்தனைகளை கட்டியெழுப்புவதற்கான உறுதியான கட்டமைப்பாக JXG இன் அலுவலக செயற்பாட்டு பகுதி அமைந்துள்ளது. முகாமைத்துவ மூலோபாயங்களை பின்பற்றியுள்ளதுடன், ESG கொள்கைகள் மற்றும் நிலைபேறாண்மை முயற்சிகளையும் பின்பற்றி, வினைத்திறன், உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்கம் மிக்க பணிச்சூழலை ஏற்படுத்தக்கூடிய நவீன தொழினுட்பங்களையும் JXG பின்பற்றுகிறது. தொடர்ச்சியான பயிலல் மற்றும் இணைந்த மாற்று பணியாற்றலுக்கான ஆரோக்கியமான கலாசார சூழலை JXG வினைத்திறனான வகையில் ஏற்படுத்தியுள்ளது. முன்னேற்றத்தை அளவிடுவதற்கான JXG இன் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக மாத்திரம் இந்த மைல்கல் அமைந்திராமல், தொழிற்துறையினுள் எதிர்காலத்துக்கான நியமத்தை நிர்ணயிப்பதாகவும் இந்த சாதனை அமைந்துள்ளது.
JXG பற்றி (ஜனசக்தி குழுமம்)
JXG என்று அழைக்கப்படும் ஜனசக்தி குழுமம், இலங்கையில் காப்புறுதி, நிதியியல் மற்றும் முதலீட்டு வங்கியியல் துறைகளில் பிரசன்னத்தைக் கொண்ட வளர்ந்து வரும் நிதிசார் கூட்டு நிறுவனம் ஆகும். குழுமத்தின் ஒவ்வொரு வணிகமும், அவற்றின் துறைகளில் ஒப்பற்ற முன்னோடியாக திகழ்கின்றது. ஜனசக்தி குழுமம், ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, ஒரியன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி மற்றும் ஜனசக்தி அறக்கட்டளை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
JXG இன் செயற்பாடுகள் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறுவனரும் முன்னாள் தலைவருமான திரு. C.T.A ஷாப்டர் அவர்களால் இலங்கையின் முதலாவது விசேடத்துவம் வாய்ந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தொழிற்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்தது. கடந்த தசாப்த காலங்களில், மூலோபாய ஒன்றிணைவுகள் மற்றும் கையகப்படுத்தல்களினூடாக, ஜனசக்தி குழுமம் விரிவாக்கமடைந் ந்துள்ளது.
வர்த்தக நாமத்தில் காணப்படும் X என்பதனூடாக, வாய்ப்புகள், விரிவாக்கம் மற்றும் சிறந்த வளர்ச்சி ஆகியன வெளிப்படுத்தப்படுகின்றன. இது ஒருங்கிணைந்த நிறுவனமாக ஒன்றிணைந்த வாய்ப்புகளை உணர்த்துகின்றது. “Stronger Together, Stronger Than Ever” எனும் தொனிப்பொருளினூடாக, ஒற்றுமை மற்றும் திரண்ட வலிமை போன்றவற்றுக்கான JXG இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

