வடக்கு
788 வழித்தட தனியார் பேரூந்து சேவை!

Apr 23, 2025 - 12:36 PM -

0

788 வழித்தட தனியார் பேரூந்து சேவை!


யாழ். சங்கானை பிரதேச வைத்தியசாலையின் மூலம் பேரூந்து சேவைகள் இன்று (23) காலை 9 மணிமுதல் சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

 

கடந்த சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது குறித்து 788 வழித்தட சங்க பேரூந்து உரிமையாளர்களிடம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளிகளின் நலன் கருதி வைத்தியசாலையின் ஊடாக பேரூந்து சேவைகளை முன்னெடுக்குமாறு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று முதல் கீரிமலை இளவாலை, தொட்டிலடி, மானிப்பாய், யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடும் 788 வழித்தட தனியார் பேரூந்து சேவையிலுள்ள மூன்று பேரூந்துகள் தமது சேவையை குறித்த வைத்தியசாலையின் ஊடாக மேற்கொள்ளவுள்ளன.

 

இதன் மூலம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் பல தரப்பினரும் நன்மைகளை பெற்று கொள்ள கூடியதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்நிகழ்வில் சங்கானை வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், யாழ். மாவட்ட கூட்டிணைக்கபட்ட தனியார் பஸ் கம்பனிகளின் சங்கத்தின் தலைவர் கெங்காதரன், இளவாலை சிற்றூர்தி சங்க தலைவர், சங்கானை பிரதேச செயலர், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வைத்தியசாலை வைத்தியர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05