பல்சுவை
புதுமனைவிக்கு டுவிஸ்ட்

Apr 23, 2025 - 03:42 PM -

0

புதுமனைவிக்கு டுவிஸ்ட்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம், ஹாபூரை சேர்ந்தவர் நவீன். இவருக்கு கசல்பூரை சேர்ந்த இளம் பெண்ணுடன் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் திகதி திருமணம் நடந்தது.

 

ஹபீஸ் போர் பொலிஸ் நிலையத்தில் தலைமை அதிகாரியாக வேலை செய்து வருபவர் நிர்மலா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

 

நிர்மலாவுடன் நவீனுக்கு ஏற்கனவே கள்ள தொடர்பு இருந்து வந்தது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் திருமணமான 2 ஆவது நாளில் மனைவிக்கு தெரிய வந்தது. இதனை மனைவி கண்டித்து வந்தார். இருப்பினும் நவீன் நிர்மலாவுடன் உள்ள தொடர்பு துண்டிக்கவில்லை.

 

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி நிர்மலாவுடன் நவீன் ஓட்டம் பிடித்தார். அவரை 2 ஆவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு முதல் மனைவியை நிர்மலாவுடன் தங்க வைத்தார்.

 

முதல் மனைவியை காட்டிலும் நிர்மலாவுடன் நவீன் அதிக பாசத்துடன் நெருக்கமாக இருந்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் ஒரே வீட்டில் இவர்கள் நெருக்கமாக இருப்பது முதல் மனைவிக்கு பிடிக்கவில்லை.

 

இதுகுறித்து நவீன் மீது பாபு காத் பொலிஸில் முதல் மனைவி புகார் செய்தார். மனைவி தன்மீது பொலிஸில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட நவீன், நிர்மலா மற்றும் அவரது 3 குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார்.  பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Comments
0

MOST READ
01
02
03
04
05