Apr 24, 2025 - 10:48 AM -
0
வருடாந்தம் தலதா வழிபாட்டு நிகழ்வை நடத்துவது தொடர்பான முன்மொழிவை மகாநாயக்க தேரர்கள் மற்றும் தியவடன நிலமேயிடம் முன்வைக்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்தார்.
இன்று (24) காலை இடம்பெற்ற அரசாங்க அதிபர்களுடனான விசேட சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
சுகாதார பிரிவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக கண்டியின் தற்போதைய நிலைமை குறித்து முடிவெடுப்பதற்காக மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

