Apr 24, 2025 - 12:11 PM -
0
2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் இன்று (24) நாளை (25) தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
அந்தவகையில், மலையகத்தில் இன்று காலை வேளையிலேயே பொலிஸார் வாக்களிக்க ஆரம்பித்தனர்.
இன்று காலை ஆரம்பித்த வாக்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸார் சென்று வாக்களித்து வருகின்றனர்.
இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
--