வணிகம்
கவர்ச்சிகரமான லீசிங் தெரிவுகளை வழங்க கொமர்ஷல் வங்கியும் மைக்ரோ கார் நிறுவனமும் ஒன்றிணைவு

Apr 24, 2025 - 12:54 PM -

0

கவர்ச்சிகரமான லீசிங் தெரிவுகளை வழங்க கொமர்ஷல் வங்கியும் மைக்ரோ கார் நிறுவனமும் ஒன்றிணைவு

கொமர்ஷல் வங்கியானது மைக்ரோ கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அல்லது பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு முழு வரிசைக்கும் கவர்ச்சிகரமான லீசிங் தெரிவுகளை வழங்குவதற்காக, மைக்ரோ கார்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மூலோபாய பங்குடைமை ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

இந்த பங்குடைமைக்கிணங்க, இரு நிறுவனங்களும் லீசிங் வசதியில் வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளன. இந்த பங்குடைமைக்கான ஒப்பந்தமானது மார்ச் 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. 

இந்த சலுகைகள் இலங்கையில் மைக்ரோ கார்ஸ் நிறுவனத்தினால் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் MG, Chery, Proton, KGM – SUVகள் மற்றும் Higer சொகுசு பேருந்துகள் உட்பட அனைத்து வர்த்தக நாமங்களுக்கும் பொருந்தும். 

இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், Chery Tiggo4Pro SUV விலையில் ரூ.50,000 விலைக்கழிவு, Proton Saga கார்களுக்கு முதல் ஆண்டு முழு காப்புறுதித் தொகை மற்றும் இரண்டு ஆண்டுகள் அல்லது 40,000 கி.மீ சேவை பொதி இலவசமாக வழங்கப்படுவதுடன் Rexton Sports பிக்-அப்களை கொள்வனவு செய்யும் முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு இலவச பதிவு ஆகியவற்றை வழங்க மைக்ரோ கார்ஸ் உறுதியளித்துள்ளது. 

MG வாகன வரிசைகளை எடுத்துக்கொண்டால் MG ZS MCEயை கொள்வனவு செய்யும் முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் சிறப்பு அறிமுக விலையையும், MG ZS Hybrid+, MG HS PHEV, MG5 Sedan, MG S5 – EV மற்றும் MG4 – EV வாகனங்களை பெற விரும்புபவர்களுக்கு சிறப்பு விலைகளையும் வழங்கவுள்ளது. 

மேலும் கொமர்ஷல் வங்கியானது இந்த கூட்டு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் புதிய வாகனத்தைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில், கவர்ச்சிகரமான மற்றும் நியாயமான விலையில் லீசிங் திட்டங்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட கட்டணத் திட்டங்களை வழங்கவுள்ளது. 

வங்கியின் உயர் லீசிங் வசதியின் கீழ், ஏழு வருட லீசிங் வசதிக்கு, ஒவ்வொரு ரூ. 100,000 க்கும் ரூ.1,598.00 என்ற வாகன லீசிங் வாடகையில் கொமர்ஷல் வங்கி மிகக் குறைந்த கட்டணத்தை வழங்குகிறது. கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. 

அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05