Apr 24, 2025 - 01:50 PM -
0
SLIIT இனால் வழங்கப்படும் முதுதத்துவமானி (Master of Philosophy -MPhil) மற்றும் கலாநிதிப் பட்ட (Doctor of Philosophy - PhD) பாடநெறிகள் மூலம் தமது ஆய்வுகள் மற்றும் தொழில்சார் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களிடமிருந்து SLIIT இன் வணிகப் பிரிவு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளது.
SLIIT இல் காணப்படும் அதிநவீன வசதிகள், உலகளாவிய ரீதுியில் புகழ்பெற்ற பேராசிரியர்களுடன் காணப்படும் தொடர்புகள் என்பன இளமானி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை திறன்களை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நேர்மறையான கல்வி சாதனைகளை அடைவதற்கு ஒரு சிறந்த சூழலை உருவாக்குகின்றன. இந்தப் பாடநெறிகளின் ஊடாக இலங்கையில் அறிவு மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்துவதில் SLIIT கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பறைசாற்றப்படுவதுடன், ஆர்வமுள்ள அறிஞர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி வாய்ப்புக்களையும் இவை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
SLIIT இன் முதுதத்துவமானி பட்டப்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்பு என்பன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன், இப்பட்டங்களைத் தொடர விரும்புவோர் மேம்ட்ட ஆய்வுகளைத் தொடர்வதற்கும், அவர்களின் கல்வித் தகுதிகளை மிக உயர்ந்த மட்டத்திற்கு மேம்படுத்திச் செல்வதற்கும் இவை இணையற்ற வாய்ப்புக்களை வழங்குகின்றன.
2017 ஆம் ஆண்டு முதல் கணினி பீடம் மற்றும் பொறியியல் பீடத்தில் இதே போன்ற பட்டப்படிப்பு திட்டங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட பட்டப்பின்படிப்பு ஆய்வுகள், SLIIT ஏற்கனவே கொண்டுள்ள வலுவான ஆய்வுக கட்டமைப்புடன் இணைந்துள்ளன. பல்வேறுபட்ட வணிகத் துறைகளில் அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ளத் தகுதிவாய்ந்தவர்கள், SLIIT Business School இல் இணைந்துகொள்ளுமாறு வரவேற்கப்படுகின்றனர். இந்த மேம்பட்ட ஆய்வுக் கற்கையானது இலங்கை கல்வித்தகைமை மட்ட நியமத்தின் (SLQF) வழிகாட்டுதல்களுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், முதுதத்துவமானி பட்டப்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புக்கள் கல்வித்தகைமை மட்ட நியமத்தின் 11 மற்றும் 12 நிலைகளைக் கொண்டுள்ளன. அத்துடன் இவை உயர்மட்ட கல்வி வளர்ச்சி மற்றும் கல்வி பங்களிப்புக்கான திட்டமிடப்பட்ட பாதையையும் உருவாக்குகின்றன.
வணிக முகாமைத்துவம் (Business Management), பொருளியல் (Economics), கணக்கியல் மற்றும் நிதியியல் (Accounting & Finance), வணிகம் மற்றும் வர்த்தகம் (Trade & Commerce), வங்கியியல் மற்றும் காப்புறுதி (Banking & Insurance), தகவல் முகாமைத்துவம் (Information Management), பொது முகாமைத்துவம் (Public Management) மற்றும் மனித வள முகாமைத்துவம் (Human Resource Management) உள்ளிட்ட பல்வேறு வணிகத் துறைகளில் அதிநவீன ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான தனித்துவமான வாய்ப்புக்களை மாணவர்களுக்கு வழங்குகின்றது.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்பின்படிப்புத் தகுதிகள் மற்றும் ஆய்வு குறித்த விரிவான அனுபவத்தைக் கொண்ட ஆய்வாளர்களைக் கொண்ட விசேட மதிப்பாய்வுக் குழுவின் காரணமாக SLIIT இன் ஆய்வுத் திட்டங்களுக்கான புகழ் உயர்வாக உள்ளன. அத்துடன், சர்வதேச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்விசார் நிபுணர்கள் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் அடங்கிய குழுவினால் கூட்டு மேற்பார்வை வாய்ப்புக்கள் வழங்கப்படுவதுடன், இவை கலாநிதிப் பட்டக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் எதிர்கால உலகளாவிய கண்ணோட்டங்கள் மற்றும் நிபுணத்துவத்தை இலகுவில் அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த SLIIT இன் துணைவேந்தர் பேராசிரியர் ராகுல அத்தலகே, “SLIIT இல் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புக்கான கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளோம். பட்டப் பின்படிப்பு ஆய்வுக் கற்கைகள் மூலம் கல்வி மற்றும் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான வளங்கள், வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை கல்வியியலாளர்களுக்கு நாம் வழங்குகின்றோம்” என்றார்.
SLIIT அதன் பல்வேறு கல்வி பீடங்கள், அதிநவீன ஆய்வக வசதிகள், நூலகம் மற்றும் பொது படிப்பு வசதிகள் மற்றும் அதிநவீன ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு படிப்பு இடங்கள் மூலம் மாணவர்களுக்கு மதிப்புமிக்க நன்மைகளை வழங்குகிறது. இந்தப் பட்டக் கல்வியைத் தொடர்வதற்காக முதற்கட்டத் தேர்வுக்கு முகங்கொடுத்து, அதன் பின்னர் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கெடுத்து, அவற்றிற்குப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். தங்கள் மேற்பார்வையாளருடன் ஆறு மாதங்கள் பணிபுரிந்த பிறகு, கற்கை நெறியைத் தொடர்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பதிவுக்கான விரிவான முன்மொழிவைச் சமர்ப்பிக்க வேண்டும்.
SLIIT நிறுவனம் குறிப்பிட்ட பட்டப்படிப்புகளுக்கு குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில், திறமையான மாணவர்களுக்கு முழுயான புலமைப்பரிசில்களுடன் கூடிய கவர்ச்சிகரமான உதவித் தொகைகளை வழங்கி வருகின்றது. மேலும், இந்த உதவித்தொகை திட்டங்களின் கீழ், திறமையான விண்ணப்பதாரர்கள் பாடநெறி கட்டணத்தில் 90% வரை சலுகையைப் பெறலாம். அத்துடன், பட்டப்படிப்பின் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் தவணைகளில் செலுத்த வேண்டிய பாடநெறி கட்டணங்களுக்கு நெகிழ்வான கட்டணத் தெரிவுகளும் உள்ளன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த SLIIT Business School பேராசிரியர் ரேணுகா ஹேரத் “விமர்சன சிந்தனைகள், புதுமை மற்றும் கல்விக்கான சிறப்பை மேம்படுத்தும் வகையிலேயே எமது ஆய்வுக் கற்கைத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எமது பீடத்தின் வழிகாட்டல் மற்றும் காணப்படும் நவீன வசதிகளுக்காக ஆய்வாளர்களுடன் மாணவர்கள் தங்கள் துறைகளில் உண்மையான முன்னேற்றத்தை அடைய அதிகாரம் பெறுகிறார்கள்” என்றார்.
உயர்கல்வியின் சிறப்பு, புதுமை மற்றும் தலைமைத்துவத்தின் 25 ஆண்டுகால பெருமைமிகு சாதனையை SLIIT கொண்டாடுகிறது. டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2025 இன் படி, இலங்கையில் முதலிடத்தில் உள்ள அரசு சாரா பல்கலைக்கழகமாகவும், நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள SLIIT, தொழில்துறை தொடர்பான கல்வி மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களுடன் மாணவர்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது.
முதுதத்துவமானி பட்டப்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் இப்போது கிடைப்பதுடன், இந்த விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்தப் பட்டப்படிப்புக்களில ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SLIIT இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும் அல்லது SLIIT வணிக SLIIT Business School பேராசிரியர் ரேணுகா ஹேரத் அவர்களின் Renuka.h@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இந்தப் பட்டப்படிப்பு திட்டங்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறை பற்றிய மேலதிக தகவல்களை SLIIT இன் ww.sliit.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் அல்லது பார்வையிடுவதன் மூலமோ அல்லது SLIIT Business School ஐத் தொடர்புகொள்வதன் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.

