Apr 24, 2025 - 02:40 PM -
0
யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு தற்பொழுது இடம்பெற்று வருகிறது.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (24) ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
யாழ்பாண மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 292 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாளை (25) அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறுவதுடன், அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
--