Apr 24, 2025 - 03:32 PM -
0
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோக நடவடிக்கையானது 30 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக கடந்த 16ஆம் திகதி தபால் திணைக்களத்ததிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
14 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 29 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் தொடரும் என்றும், ஏப்ரல் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட விநியோக நாளாகக் கருதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாகவும் தபால்மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் மே 6 ஆம் திகதி வரை தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முழு அனுமதியுடன் விடுமுறை பெற முடியும் என்றும் தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

