Apr 24, 2025 - 04:17 PM -
0
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், இலங்கையின் நான்காவது மதிப்பாய்வு குறித்து இந்த வாரத்திற்குள் பணியாளர்கள் மட்ட உடன்பாட்டை எட்ட முடியும் என்று தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று (24) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தற்போது அமெரிக்காவினால் உலக நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரிக் கொள்கையின் மூலம் உருவாகக்கூடிய புதிய உலகளாவிய பொருளாதார நிலைமைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

