Apr 24, 2025 - 04:42 PM -
0
NDB வங்கியானது நீருக்கடியில்தூய்மைப்படுத்துவதன் மூலம் கடல் பாதுகாப்பில் இணைந்து கொள்வதற்காக கிளீன் ஓஷன் ஃபோர்ஸ் லங்காவுடன் [Clean Ocean Force Lanka] கூட்டு சேர்ந்த முதலாவது உள்நாட்டு வங்கியாக மாறியுள்ளது. இன்றுவரை பார் ரீஃப் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதி மற்றும் பார்பெரின் தீவுக்கு அருகிலுள்ள கிழக்கு கடற்கரையில் 3 முக்குளித்தல் [Dives] செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆறு நீரில் மூழ்குபவர்களைக் [Divers] கொண்ட அர்ப்பணிப்புள்ள குழுவானது ஆழ்கடல் முக்குளிப்பு செயற்பாடுகளை நடத்தி, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிகளில் இருந்து 130 கிலோவிற்கும் அதிகமான தீங்கு விளைவிக்கும் கடல் கழிவுகளை வெற்றிகரமாக அகற்றியது.
NDB வங்கியின் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியானது, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்கு 14 (நீருக்குக் கீழே வாழ்க்கை) - கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான முறையில் முகாமைத்துவம் செய்தல் திட்ட முயற்சியை நேரடியாக ஆதரிக்கிறது. கிளீன் ஓஷன் ஃபோர்ஸ்[Clean Ocean Force], ஏர்த் லங்கா[Earth Lanka] மற்றும் கல்பிட்டி டைவ் சென்டரைச்[Kalpitiya Dive Cente]சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட நீரில் மூழ்கும் குழுவினர் [dive team] கடற்கரைக்கு வெளியே உள்ள அசுத்தமான சூழ்நிலைகளை துணிச்சலுடன் அகற்றினர்.
- கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் 90 கிலோ நிறையுடைய கோஸ்ட் வலைகள்
- கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை சிதைக்கும் 38 கிலோ நிறையுடைய பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் கழிவுகள்
-மீன்கள் தொகை மற்றும் பவளப்பாறைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைக்கும் 5 கிலோ நிறையுடைய கைவிடப்பட்ட மீன்பிடி கொக்கிகள் , ஆகியன இச்செயற்பாடுகள் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
இலங்கையின் கடல் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளில் NDB வங்கியின் Clean Ocean Force Lanka உடனான பங்குடைமை மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும், எதிர்கால சந்ததியினர் தூய்மையான, ஆரோக்கியமான கடலை மரபுரிமையாகப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் வங்கியானது கடல் சுற்றுச்சூழலை மேற்பார்வை செய்யும் செயற்பாடுகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
இந்த முயற்சிதொடர்பாக கருத்து தெரிவித்த NDB வங்கியின் பெரு நிறுவன நிலைத்தன்மைக் குழுவின் தலைவர் லசந்த தசநாயக்க, எமது பெருங்கடல்கள் விலைமதிப்பற்றவையாகும்.அவற்றைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் பொறுப்பாக மட்டுமல்லாது, நாம் நிலைநிறுத்த வேண்டிய மரபாகவும் திகழ்கிறது. NDB வங்கியில், எமது நிறுவன நெறிமுறைகளில் நிலைபேறான நிலையைப் பேணுவது உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடற்கரையையும் அதன் சுற்றுச் சூழலையும் தூய்மைப்படுத்துவதானது அர்த்தமுள்ள சுற்றுச்சூழல் நடவடிக்கைக்கான எமது உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். கடல் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம், இலங்கையின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதுடன் மட்டுமல்லாமல், தூய்மையான, நிலையான எதிர்காலத்தை நோக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சமூகங்களை ஊக்குவிக்கிறோம்.
நீருக்கடியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு பொறுப்புள்ள உள்நாட்டு வங்கியொன்று முன்வந்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.மேலும் இது NDB வங்கியை இதுபோன்ற கடல் பாதுகாப்பை ஆதரிக்கும் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் முதல் வங்கியாக நிலைநிறுத்துகிறது. அவர்களின் ஆதரவு, இலங்கையில் முன்னணி பெருநிறுவன வங்கியொன்று எவ்வாறு உண்மையான சுற்றுச்சூழல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது என்று Clean Ocean Force Lankaவின் தலைவரும் ஸ்தாபகருமான ஜெரோம் பெர்னாண்டோ தமது வங்கியுடனான ப்ங்குடைமை குறித்து பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பெருநிறுவன மற்றும் சமூகத்தால் செயற்படுத்தப்படும் பாதுகாப்பு முயற்சிகள் மூலம், இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், நிலையான வளர்ச்சியில் நம்பகமான பங்காளியாக அதன் பங்கை வலுப்படுத்துவதிலும் NDB வங்கி உறுதியாக உள்ளது.

