செய்திகள்
நெவில் சில்வாவுக்கு பிணை

Apr 24, 2025 - 04:44 PM -

0

நெவில் சில்வாவுக்கு பிணை

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நெவில் சில்வா இன்று (24) நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். 

அதற்கமைய, குறித்த வழக்கின் 9ஆவது சந்தேகநபரான நெவில் சில்வா இன்று (24) நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05