Apr 24, 2025 - 10:09 PM -
0
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக என நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக கிளிநொச்சியில் தெரிவித்தார்.
வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை மாவட்ட செயலகத்தில் சந்தித்தனர்.
குறித்த சந்திப்பினைத் தொடர்ந்து ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியியின் முன்னேற்றம், அறிவியல் நகர் நகர அபிவிருத்தி, மாவட்டத்தின் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட விடயங்களை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
--