Apr 25, 2025 - 11:15 AM -
0
கண்டியில் இடம்பெற்றுவரும் சிறி தலதா வழிபாட்டின் போது, கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ பொலிஸ் வீரர் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் திட்டும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, இந்த சம்பவம் குறித்து பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டம் 1 க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த இராணுவ அதிகாரி, பக்தர்கள் குறைவாக இருந்த வரிசை ஒன்றிற்கு மற்றொரு குழுவினரை அனுமதிக்க முயற்சித்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி, அந்த இராணுவ அதிகாரியை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

