Apr 25, 2025 - 02:31 PM -
0
சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) அனுமதி அளித்துள்ளது.
சந்தேக நபரை மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

