வடக்கு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம்

Apr 25, 2025 - 03:12 PM -

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம் இன்று (25) கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

 

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவிக்கையில்,

 

2,984 ஆவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமது உறவுகளை தேடி அலைந்து திரிவதாகவும் இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசாங்கமும் தமக்கான தீர்வினை பெற்றுத் தரவில்லை.

 

சர்வதேசத்திடம் ஒரு முகமும் எம்மிடம் ஒரு முகமாக அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. தற்போதைய அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வு பெற்று தரப்படும் என வாக்குறுதிகள் வழங்கினர்.

 

ஆனாலும் இதுவரையில் எந்த விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05