Apr 25, 2025 - 03:51 PM -
0
MegaPay இன் Pay & Go தளம் ஏற்கனவே 1000 இற்கும் மேற்பட்ட டிஜிட்டல் கியோஸ்க்குகள் மூலம் மற்றும் பரவலாக பாவனையில் உள்ள மொபைல் செயலி மூலம் நாடு முழுவதுமான கட்டணம் செலுத்தும் நடைமுறையை மாற்றியமைத்துள்ளது. பாவனையாளர் வசதியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இப் Pay&Go பொதுச் சேவை கட்டணங்கள் முதல் ரீலோட்கள் வரை பல்வேறு வகையான கட்டணங்களை ஒரு சில தட்டல்களில் செலுத்த வழியமைக்கின்றது.
இலங்கையின் டிஜிட்டல் கட்டணத்திற்கான தலத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக நிதி தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்கும் மெகா பே அதன் முன்னணி தயாரிப்பான Pay&Go மற்றும் Lanka Electricity Company (LECO) இடையே நேரடி ஒன்றிணைப்பை அறிவித்துள்ளது. இவ் ஒன்றிணைப்பு Pay&Go செயலி மற்றும் கியோஸ்க் பாவனையாளர்களுக்கு தங்கள் மின்சார கட்டண நிலுவை தொகையை பார்க்கவும் பணம் செலுத்திய உடனே அதன் பிரதிபலிப்பை அவர்களின் கணக்கில் பார்க்கவும் வழியமைக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தடையற்ற வெளிப்படையான அனுபவம் வழங்கப்படுகிறது.
இவ் டிஜிட்டல் மாற்றம் கட்டண செலுத்தல்களில் ஒரு புதிய மாற்றத்தினை அறிமுகப்படுத்துகிறது. Pay&Go இன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் பாவனையாளர்கள் இப்போது நிகழ்நேர பிரதிபலிப்பு மற்றும் உடனடி கட்டண உறுதிப்படுத்தல்களை அனுபவிக்கின்றார்கள். இதனால் கட்டணம் சம்பந்தப்பட்ட பிழைகள் மற்றும் தாமதங்கள் கணிசமாக குறைகின்றன.
இம்மாற்றதிற்கான அதன் நேரடி ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு செயலாக தேர்ந்தெடுக்கப்பட்ட LECO சேவை இடங்களில் பிரத்தியேக கியோஸ்க்குகளை நிறுவ Pay&Go திட்டமிட்டுள்ளது. இவ் இயந்திரங்கள் நேரடி பரிவர்த்தனைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் திறனான ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. இதன் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறிப்பிட்டோருக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் பரவலான இடங்களிலும் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
'டிஜிட்டல் கட்டணங்களை விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் மேலும் அணுகக் கூடியதாகவும் மாற்றுவதற்கான எங்கள் நோக்கத்திற்கு இந்த வணிக ஒன்றிணைப்பு ஒரு சான்றாகும்' என்று Pay&Go இன் இயக்குநர் வர்தன் அஸ்லிபேக்யன் கூறினார். 'நாடு முழுவதும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் பொது பயன்பாடுகளில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதிலும் LECO உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.'
இம் முயற்சி குறித்து கருவித்த தெரிவித்த LECO நிறுவனத்தின் தலைமை பொறியியலாளர் ஜனக அலுத்கே 'நமது நுகர்வோரின் நலன்கருதி எமது செயற்பாடுகளை நவீனமயமாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் LECO இன் தொடர் முயற்சியை இச் செயற்sபாடு ஆதரிக்கின்றது. Pay&Go தொழில்நுட்பத்தின் மூலம் நாங்கள் மேலும் வசதியான அதிக வேகத்திலான சிறந்த சேவை வழங்கலை வழங்க முடிகின்றது' என்று கூறினார்.
அத்துடன் சேர்த்து LECO இன் பொது மேலாளர் டாக்டர் நரேந்திர டி சில்வா பின்வருமாறு குறிப்பிட்டார்:
'டிஜிட்டல் மயமாக்கல் என்பது வணிகம் மேற்கொள்ளும் ஓர் முக்கிய வழியாக இருக்கும் ஒரு தசாப்தத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கட்டண செலுத்தல்களை மேற்கொள்வதற்கான ஒரு அமைப்பை Pay&Go LECO இன் டிஜிட்டல் தளத்துடன் ஆழமான ஒருங்கிணைப்பை மேற்கொண்டு உருவாக்கியுள்ளமையை கண்டு LECO மிகவும் மகிழ்ச்சியடைகிறது' என்றார்.
இம் முயற்சி இலங்கையின் பிரஜைகள் அரச நிறுவனங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றார்கள் என்பதை மாற்றியமைப்பதற்கான Pay&Go இன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது. மேலும் பல அரச சேவைகளை அதன் தளத்தில் இணைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுடன் டிஜிட்டல் ரீதியில் பலம்பெற்ற தேசத்தை கட்டியெழுப்புவதில் Pay&Go முன்னணியில் உள்ளது. இதன் காரணமாக இதன் பின்னர் பில் கட்டணம் செலுத்துவது இனி ஒரு தொந்தரவாக இருக்காது. ஒரு மென்மையானரூபவ் ஒருங்கிணைக்கப்பட்ட அனுபவமாக இருக்கும்.
தொந்தரவு இல்லாத பில் கட்டணங்களுக்கு Google Play அல்லது App Store மூலமாக Pay&Go Sri Lanka செயலியை பதிவிறக்கவும். அருகிலுள்ள கியோஸ்க் இருப்பிடத்தை கண்டறிய www.paygo.lk ஐப் பார்வையிடவும்.

