Apr 25, 2025 - 05:33 PM -
0
மட்டக்களப்பு, கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் களுவாங்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (25) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிரான்குளம் 8 பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த க.பொ.தர சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயதுடைய இராஜன் வினோஜினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரான்குளத்தில் உள்ள பாடசாலையில் கல்விகற்றுவரும் குறித்த மாணவி வழமை போல் சம்பவதினமான இன்று பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.