Apr 25, 2025 - 06:49 PM -
0
மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில், கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை பெற்று சென்றபோது நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை மீறியதன் மூலம் தேஷபந்து தென்னகோன் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (25) குறிப்பிட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்புக்காக முதல் கட்டத்திலேயே வழக்குத் தொடர மாத்தறை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாததால், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யமாறு சட்டமா அதிபருக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

