செய்திகள்
எல்பட தோட்ட தொங்கு பாலத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

Apr 26, 2025 - 12:49 PM -

0

எல்பட தோட்ட தொங்கு பாலத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

பழுதடைந்துள்ள நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் எல்பட தோட்டப்பகுதி மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் தொங்கு பாலத்தை புனரமைத்து தருமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நோர்வூட் எல்பட கீழ் பிரிவு மற்றும் மேல்பிரிவு ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் குறித்த வீதியினையே பயன்படுத்தி வருகின்றனர். 

நாட்டிலும் பல தரப்பட்ட அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றாலும் போக்குவரத்துக்கு பிரதான பாலமாக காணப்படும் இதனை​ புனரமைப்பதற்கு எவரும் முன்வரவில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

கடந்த காலங்களில் நோர்வூட் பிரதேச சபை ஊடாக 13 இலட்சம் ரூபாய் நிதி ஒதுகீட்டில் பாலத்தினை புனரமைப்பதாக கூறி வெறுமனே வாகை பலகையினை கொண்டு அதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த பாலம் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றமையால் கடந்த காலங்களில் உயிர் சேதங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

நோர்வூட் தேசிய கல்லூரி மற்றும் ​ஹய்லன்ஸ் கல்லூரி பொகவந்தலாவ சென் மேரீஸ் தேசிய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு செல்லும் பாடசாலை மாணவர்களும் நாளாந்தம் இந்த தொங்கு பாலத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த பாலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பலகைகளும் உக்கிய நிலையில் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதுவரை காலமும் மலையகத்தில் எந்த ஒரு அரசியல்வாதிகளும் இந்த தொங்கு பாலம் குறித்து அக்கறை காட்டவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக தோட்ட மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் இந்த தொங்கு பாலத்தினை கொங்ரீட் பாலமாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05