செய்திகள்
ஹைலெவல் வீதியில் போட்டி போட்டு ஓடிய கார்கள் சிக்கின

Apr 26, 2025 - 04:30 PM -

0

ஹைலெவல் வீதியில் போட்டி போட்டு ஓடிய கார்கள் சிக்கின

ஹைலெவல் வீதியில் போட்டி போட்டுக் கொண்டு செலுத்தப்பட்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 

கடந்த 13 ஆம் திகதி, ஹோமாகம பொலிஸ் பிரிவில் கலவிலவத்தை திசையிலிருந்து மாகும்புர திசை நோக்கி இரண்டு கார்கள் அதிவேகமாக செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவின. 

இந்த வீடியோவின் மீது கவனம் செலுத்தப்பட்ட பின்னர் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு கார்களும் நேற்று (25) பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 

 

சம்பவத்துடன் தொடர்புடைய கார்களின் சாரதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05