மலையகம்
விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்

Apr 27, 2025 - 02:47 PM -

0

விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்


இன்று (27) நண்பகல் 12 மணியளவில் மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கி பல மணி நேரம் நீடித்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல விவசாய நிலங்களும் சேதமடைந்தன.

 

நுவரெலியா, மீபிலமன, கந்தபொல, பொரலந்த, ஹவாஎலியா மற்றும் சாந்திபுர ஆகிய பிரதேசங்களில் இந்த நிலைமை காணப்பட்டது.

 

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, எதிர்வரும் நாட்களில் இதேபோன்ற மழை பெய்யும் அபாயம் இருப்பதால், அபாயகரமான வானிலை நிலவும் சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

 

மேலும், கனமழை பெய்யும் காலங்களில், ரடெல்லா ஷார்ட் வீதி உள்ளிட்ட செங்குத்தான சரிவுகள் உள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்குமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05