Apr 27, 2025 - 03:01 PM -
0
பன்னாட்டு நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் இளவேனிற் காலக் கூட்டங்களின் பக்க நிகழ்வாக 2025 ஏப்ரல் 23 அன்று வோசிங்டன் டி.சி யில் இடம்பெற்ற உலகளாவிய நாட்டுக்கான படுகடன் வட்டமேசைக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரிக்கான செயலாளர் கே. எம். எம் சிறிவர்த்தன ஆகியோர் பங்கேற்றனர்.
படுகடன் தொடர்புபட்ட சவால்கள் மற்றும் தீர்வுகள் பற்றி பங்குதாரா்கள் மத்தியில் பொதுவான புரிந்துகொள்ளலை மேம்படுத்துவதற்காக கடன்பெற்ற நாடுகளையும் கடன்கொடுநர்களையும் ஒன்றுசேர்ப்பதற்காக 2023 பிப்ரவரியில் உலகளாவிய நாட்டுக்கான படுகடன் வட்டமேசைக் கலந்துரையாடல் உருவாக்கப்பட்டது.
உலகளாவிய நாட்டுக்கான படுகடன் வட்டமேசைக் கலந்துரையாடலுக்கு பன்னாட்டு நாணய நிதியமும் உலக வங்கியும் ஜி20 தலைமைகளும் இணைத்தலைமை வகிக்கின்றன. பல்வேறு படுகடன் தொடர்புபட்ட பங்குதாரா்களை ஒன்று சேர்ப்பதற்குப் புறம்பாக உலகளாவிய நாட்டுக்கான படுகடன் வட்டமேசைக் கலந்துரையாடலின் சாதனைகள் நாட்டு அதிகாரிகளுக்கு நாட்டுக்கான படுகடனை மறுசீரமைக்கின்ற உபாயத்திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியமையை உள்ளடக்குகின்றது.
உலகளாவிய நாட்டுக்கான படுகடன் வட்டமேசைக் கலந்துரையாடல் உருவாக்கப்பட்டது முதல் முனைவர் நந்தலால் வீரசிங்க கலந்துரையாடல்களில் முனைப்புடன் பங்கேற்றுள்ளார்.
இக்கலந்துரையாடல் சுற்றின்போது,
படுகடன் மறுசீரமைத்தலில், இலங்கையின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அதேவேளை, படுகடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்தலின் மீது படுகடன் இடருக்குள்ளான நாடுகள் தவணைதவறுதல் அந்தஸ்த்திலிருந்து சுமுகமாக வெளியேறுவதை உறுதிசெய்வதற்கு நாட்டுக்கான தரப்படுத்தல் முகவராண்மைகளின் வகிபாகத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆளுநர் வலியுறுத்தினார்.

