மலையகம்
இன்னும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை

Apr 27, 2025 - 05:36 PM -

0

இன்னும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை

உண்மையைச் சொல்பவர்கள் அதிகாரத்தைப் பெற மாட்டார்கள் என்றும், பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்களுக்கு பெருந்தோட்ட மக்கள் அதிகாரத்தைக் கொடுப்பார்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

இன்று (27) ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டபகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை  தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

உண்மையைப் பேசுபவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு வாக்களிக்க தோட்டப் பகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை பெருந்தோட்டத் துறையில் மக்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

மற்ற கட்சிகள் வழங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை என்று மட்டுமே அவர்கள் விமர்சிக்கிறார்கள். நான் இராஜாங்க அமைச்சராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் இருந்த காலத்தில், எனக்குக் கிடைத்த ஒதுக்கீடுகளைக் கொண்டு தோட்டப் பகுதி மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பல முயற்சிகளை செய்தேன்.

 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தலவாக்கலையில் கூறினார். இன்னும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. எப்போதும் தோட்டத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைக்குமாறு தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05