Apr 27, 2025 - 06:11 PM -
0
அனுதாபுரம் அபய வாவிக்கு இன்று (27) நீராடச் சென்ற இளைஞர்கள் சிலர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
நான்கு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவரமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில் இருவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக எமது 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் தற்போது அனுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

