செய்திகள்
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்று சேதம்

Apr 27, 2025 - 08:59 PM -

0

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்று சேதம்

ஹாலிஎல, உடுவர பஹகனுவ பகுதியில் இன்று (27) மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. 

இதன்போது, வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தையும் பெண்ணொருவரும் மீட்கப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டிற்கும், வீட்டில் இருந்த பொருட்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05