Apr 27, 2025 - 10:30 PM -
0
உயர்தர பரீட்சையில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் உயிர்முறைமை தொழில் நுட்பப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் சந்திரசேகரன் ருக்சிகா என்ற மாணவி 2A-1B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 134 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன், குறிதத உயிர்முறைமை தொழில்நுட்பப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையை வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த உபைதுல்லா பாத்திமா ஹப்ஸா என்ற மாணவி 2A-1B சித்திகளைப் பெற்று இரண்டாம் நிலையும், சைவப்பிரகாச மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஜதுசனா என்ற மாணவி 2A-1B சித்திகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளனர்.
--