Apr 28, 2025 - 10:22 AM -
0
கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மேற்படி பிரதேசத்தில் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபர் 28 வயதுடைய ஹூரீகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், கடந்த 24ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் இவரென்பது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

