செய்திகள்
பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

Apr 28, 2025 - 10:42 AM -

0

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட தரப்பினர் தற்போது மஹர நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05