செய்திகள்
மின்னல் தாக்கி பெண் பலி - ஐவர் வைத்தியசாலையில்

Apr 28, 2025 - 05:48 PM -

0

மின்னல் தாக்கி பெண் பலி - ஐவர் வைத்தியசாலையில்

பதுளை, எட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிங்ரோஸ் நெலுவ தோட்டத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். 

இறந்தவர் அதே பகுதியில் வசித்து வந்த 47 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

அவர் தொழில் ரீதியாக கொழுந்து பறிப்பவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று (28) மாலை பெய்த பலத்த மழையின் போது குறித் பெண் உள்ளிட்ட தரப்பினர் மழையிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக கொழுந்து நிறுக்கும் பகுதிக்குச் சென்றிருந்த போதே இந்த மின்னல் தாக்கம் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05