செய்திகள்
பயணிகள் போக்குவரத்து தொடர்பில் அமைச்சர் அதிரடி தீர்மானம்

Apr 28, 2025 - 07:28 PM -

0

பயணிகள் போக்குவரத்து தொடர்பில் அமைச்சர் அதிரடி தீர்மானம்

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ஒன்பது மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களுடன் சமீபத்தில் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றார்.


இந்த கலந்துரையாடலின் போது இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.


அவையாவன,


* புத்தளம் பாதையில் ஒருங்கிணைந்த கால அட்டவணையை உடனடியாக செயல்படுத்துதல்.

* பேருந்து வழி பாதைகளில் பேரூந்து தொடர்பான நிறுவனங்களை ஆரம்பித்தல்.

* அனைத்து பேருந்துகளும் ஒரே சங்கத்தின் கீழ் இயக்கப்படும் மற்றும் லாபம் பகிர்ந்து கொள்ளப்படும் திட்டத்தின் கீழ் பேருந்து வழித்தடம் 138 இல் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குதல்.

* பேருந்துகளுக்கு GPS மற்றும் சிசிடிவி (CCTV) பொருத்துவதை முறைப்படுத்துதல்.

* ஒன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கான ஒரு அமைப்பை முறையாக  (டிஜிட்டல் அமைச்சகத்துடன் இணைந்து) உருவாக்குதல்.

* பேருந்து ஓட்டுநர்களிடம் எழுமாற்றான போதைப்பொருள் மற்றும் மதுபான சோதனைகளை நடத்துதல்.

* இயந்திரத்தால் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை கட்டாயமாக்குதல் (குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கச்செய்தல்)

* பயணிகள் பயணிக்கும் பேருந்துகளுக்கான விவரக்குறிப்பை (Specification) உருவாக்குதல்.

* பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட்களை கட்டாயமாக்குதல்.

* புதிய பேருந்துகளுக்கான வழிகளை தெரிவு செய்தல்.

*அனைத்து பேருந்துகளிலும் (NTC, SLTB மற்றும் 9 மாகாணங்களுக்கு) தவறுகளைப் முறைப்பாட்டளிக்க WhatsApp எண்களை வழங்குதல் மற்றும் அவற்றை பேருந்துகளில் காட்சிப்படுத்துதல்.

போன்ற பல விசேட தீர்மானங்கள் எட்டப்பட்டன.

 

இந்த தீர்மானங்களை செயல்படுத்துவது தொடர்பான முதற்கட்ட பணிகளை உடனடியாக தயாரிக்கவும், இந்த தீர்மானங்களை செயல்படுத்துவது தொடர்பான முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05