Apr 29, 2025 - 10:27 AM -
0
இலங்கையின் மிகவும் பிரபலமான ஆண்கள் ஆடை வர்த்தக நாமமான Signature மாத்தளையில் அதன் புதிய காட்சியறையை திறப்பதன் மூலம் அதன் சில்லறை விற்பனை விரிவாக்கத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைத்துள்ளது. இல. 23, 25 பிரின்ஸ் வீதி, மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய 10வது காட்சியறை நாடு முழுவதுமான அதன் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த பிரமாண்டமான திறப்பு விழாவில் விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட டிஜிட்டல் துறையில் செல்வாக்கு செலுத்துபவர்களும் கலந்து கொண்டனர். இலங்கையில் ஆண்களுக்கான ஃபேஷன் ஆடைகளில் முன்னணி இடத்தை பெற்று வரும் ஒரு வர்த்தக நாமமாக விளங்கி வரும் Signature, மாத்தளையில் உள்ள அதன் புதிய காட்சியறை மூலமாக உயர்தர, நவநாகரீக ஆண்கள் ஆடைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு ஸ்மார்ட் கேஷுவல், கேஷுவல், லினன் மற்றும் பார்ட்டி உடைகள், அத்துடன் சூட்கள், சட்டைகள், பிளேஸர்கள் மற்றும் கால்சட்டைகளின் பிரீமியம் தேர்வுகள் உட்பட பல்வேறு வகையான தெரிவுகள் உள்ளன. அதுமட்டுமல்லாது பரந்த அளவிலான தோல் பொருட்கள் மற்றும் ஆண்களுக்கான ஆபரணங்களும் உள்ளடங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் உடைகளுக்கு ஏற்ற சரியான அணிகலன்களை தெரிவு செய்ய முடியும்.
இந்த புதிய காட்சியறையின் ஆரம்பம் குறித்து, Signature பணிப்பாளர் அம்ஜத் ஹமீட், பேசுகையில் எங்கள் வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக இணைவதற்கும், அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆண்கள் ஆடைத் தெரிவுகளை வாங்கும்போது அவர்களுக்கு அதிக வசதியை வழங்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து வழிகளைக் ஏற்படுத்தி வருகிறோம். எதிர்வரும் மாதங்களில், அனைத்து முக்கிய நகரங்களையும் உள்ளடக்கிய புதிய கிளைகளை நாடு முழுவதும் திறக்கவிருக்கிறோம். இது எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் ஃபேஷன் தெரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும், உயர்தர சேவைகளை வழங்குவதற்கான எங்கள் குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது. என்று குறிப்பிட்டார்.
அதன் விரிவான சில்லறை விற்பனை சலுகையுடன், Signature மொத்த கொள்முதல் தெரிவையும் வழங்குகிறது, இது இலங்கை முழுவதும் 300க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்ட விரிவான வலையமைப்பைக் கொண்டது. Signature அறிமுகப்படுத்திய இலங்கையின் முதல் மொத்த விற்பனை செயலி அணுகலை மேம்படுத்துகிறது, விநியோகஸ்தர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் சமீபத்திய Signature தெரிவுகளை எளிதாக கொள்வனவு செய்யவும் ஆர்டர் செய்யவும் இது உதவுகிறது.
1990 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, Signature இலங்கையின் ஆண்கள் ஆடைத் துறையில் ஒரு உறுதியான நற்பெயரை உருவாக்கியுள்ளது, தரம் மற்றும் மலிவு விலையில் அதன் அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றது. அதன் நீண்டகால தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, இந்த வர்த்தகநாமம் நாடு முழுவதும் தனது தடத்தை விரிவுபடுத்துவதோடு, சர்வதேச வர்த்தக நாமங்களை அறிமுகப்படுத்துவதற்கான மூலோபாய கூட்டாண்மைகளையும் ஆராய்கிறது. Signature பிரத்தியேக சில்லறை விற்பனைக் கடைகள், பரவலான விநியோகஸ்தர் வலையமைப்பு மற்றும் https://signature.lk இல் உள்ள தடையற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளம் மூலம், வாடிக்கையாளர் வசதிக்காக நாடு முழுவதற்குமான விநியோகத்தை வழங்குகிறது. மதிப்புமிக்க ஹமீடியாஸ் குழுமத்தின் ஒரு பகுதியான Signature, ஆண்கள் அணியும் ஒவ்வொரு உடையிலும் ஸ்டைல், நம்பிக்கை மற்றும் மதிப்பை வழங்குவதோடு ஃபேஷன் உணர்வுள்ள ஆண்களுக்கு Signature விருப்பமான தேர்வாகவும் உள்ளது.

