Apr 29, 2025 - 10:38 AM -
0
கல்வி அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆகியவற்றுடனான கூட்டு முயற்சி தூய்மையான மற்றும் பசுமையான சூழலை வளர்ப்பதில் நெஸ்லே லங்கா நிறுவனம் மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து பாடசாலை கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்தை' 2020 ம் ஆண்டில் நெஸ்லே லங்கா நிறுவனம் ஆரம்பித்தது. இந்த செயற்திட்டம் இலங்கையில் பாடசாலை சிறுவர்கள் மத்தியில் பொறுப்புணர்வுடன் கழிவுகளை அகற்றுவதில் நேர்மறை மாற்றத்தை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த செயற்திட்டத்தின் மூலம் கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மத்தியில் கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வு அமர்வுகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கும். இச்செயற்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 1,000 பாடசாலைகளில் சுமார் 500,000 மாணவர்களை எட்டுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.
'பசுமையான எதிர்காலத்தை தோற்றுவிப்பதற்கான எமது பயணத்தில் பாடசாலை கழிவு முகாமைத்துவத் திட்டமானது ஒரு முக்கியமான முயற்சியாகும். பொதியிடலில் பிளாஸ்திக் பயன்பாட்டைக் குறைத்து மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய வகையில் எமது பொதியிடல் முறைமையை வடிவமைக்கும் எமது முயற்சிகளில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கும் அதே வேளையில் இளம் தலைமுறையினர் மத்தியில் முறையான விதத்தில் கழிவு முகாமைத்துவத்திற்கான பொறுப்புணர்வை வளர்ப்பதும் அதற்கு ஈடாக முக்கியமானது. இந்த விடயத்தில் கல்வி அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடனான எங்கள் ஒத்துழைப்பைத் தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. பேர்னி ஸ்டெஃபான் அவர்கள் குறிப்பிட்டார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் அவர்கள் கூறுகையில் 'இலங்கையைப் பொறுத்தவரையில் பிளாஸ்திக் மாசுபாடு ஒரு பாரதூரமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. பொறுப்புணர்வுடன் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு நிலைபேறான சுற்றுச்சூழல் கட்டமைப்பைத் தோற்றுவிப்பதில் முக்கியமானதொரு காரணியாகும். இந்த பிரச்சினையை உரிய முறையில் தீர்க்கவும் தமது வீடுகளிலும் இந்த மனநிலையை இளைய தலைமுறையினர் பின்பற்றுவதற்கு ஏதுவாக பசுமை பேணும் நடத்தை நடைமுறைகளை அவர்கள் மத்தியில் வளர்க்கவும் நெஸ்லே மற்றும் கல்வி அமைச்சுடனான எமது கூட்டாண்மை நேர்த்தியான வாய்ப்பை எமக்கு வழங்குகிறது என்று குறிப்பிட்டார்.
பாடசாலை கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் நிறைவாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் கண்களுக்கு தென்படும் ஆரோக்கியமான சூழல்' என்ற தலைப்பில் ஒரு சித்திரப் போட்டி நடத்தப்படும். பாடசாலை கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் போது மாணவர்கள் கற்றுக்கொண்ட முக்கிய செய்திகளை ஆக்கபூர்வமாக விளக்குவதற்கு இந்தக் சித்திரப் போட்டி சிறந்த தளத்தை அவர்களுக்கு வழங்கும்.
'இன்றும் எதிர்வரும் தலைமுறைகள் மத்தியிலும் அனைவரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு உணவின் ஆற்றலை வெளிக்கொண்டு வருதல்' எனும் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கின்ற நெஸ்லே உயர் தர உணவு மற்றும் பான வகைகளுடன் இளமை முதல் முதுமை வரை தலைமுறை தலைமுறையாக இலங்கை மக்களை வளப்படுத்தியுள்ளது. 1906 ம் ஆண்டில் இலங்கையில் தனது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளதுடன் இன்று இலங்கை மக்களின் வாழ்வுகளில் ஒரு உள்ளங்கமாகவே நெஸ்லே மாறியுள்ளது. இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற அதன் தயாரிப்புக்களின் 90% இற்கும் மேற்பட்டவற்றை கடுமையான பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் குருணாகலிலுள்ள அதன் அதிநவீன தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகின்றது.

