Apr 29, 2025 - 11:57 AM -
0
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR) அமைப்பான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF) தனது 20 வருடப் பூர்த்தியை கொண்டாடியது. 2025 ஏப்ரல் 25 ஆம் திகதி தனது பிரதான பங்காளர்களான அரசாங்க, அரச சார்பற்ற, தனியார் மற்றும் கல்விசார் துறையைச் சேர்ந்த அமைப்புகள், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற முகவர் அமைப்புகள் மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்களுக்காக விசேட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 2005 மார்ச் 28ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது முதல், இலங்கையின் நிலைபேறான வளர்ச்சி மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டலில் JKF முன்னோடியாகத் திகழ்கிறது.
இலங்கையிலுள்ள முதலாவது கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு அமைப்புகளில் ஒன்றாக திகழும் JKF, தேசிய முன்னுரிமைகள், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் ஐக்கிய நாடுகள் குளோபல் கம்பெக்ட் கொள்கைகளின் பிரகாரம், நாளைய தேசத்தை வலுப்படுத்துவோம்” எனும் எமது நோக்கத்திற்கமைவாக தாக்கத்தை ஏற்படுத்தும், நிலைபேறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.” என ஜோன் கீல்ஸ் குரூப் தலைமை அதிகாரி கிரிஷான் பாலேந்திரா தெரிவித்தார்.
“கடந்த காலங்களில், தேவைகளைக் கொண்ட எமது சமூகங்களுக்கு நீண்ட கால அடிப்படையிலான திட்டங்களை முன்னெடுப்பதில் JKF தன்னை அர்ப்பணித்திருந்ததுடன், சுமார் 9 மில்லியனுக்கு அதிகமான நபர்களை சென்றடைந்திருந்தது. ரனாலவில் எமது எலிபன்ட் ஹவுஸ் தொழிற்சாலையை சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கடதாசி சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்வது பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ஹிக்கடுவயில், Hikka Tranz by Cinnamon உடன் கைகோர்த்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பத்திக் உற்பத்தி தொடர்பான திறன்களை மேம்படுத்தியிருந்தோம். இந்தப் பயணத்தை முன்னெடுப்பதில் எமது அணியினர் எமக்கு பக்கபலமாக அமைந்திருந்ததுடன், கடந்த சில தசாப்தங்களில் எமது DNA இல் ஒரு அங்கமாக அது எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
நான்கு மூலோபாய நோக்குப் பிரிவுகளினூடாக தனது செயற்பாடுகளை JKF முன்னெடுக்கிறது. கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரங்கள், சமூக சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாடு மற்றும் உயிரியல் பரம்பல் போன்றன, குழுமத்தின் ஒட்டுமொத்த ESG கட்டமைப்பினுள் முன்னெடுக்கப்படும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. பிரதான செயற்பாடுகளான ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழிப் புலமைப்பரிசில் திட்டம், Project WAVE (கல்வியினூடாக வன்முறைக்கு எதிராக பணியாற்றல்), ஜோன் கீல்ஸ் விஷன் செயற்திட்டம், சினமன் மழைக்காடுகள் மீளமைப்பு, கலா பொல, கிராமங்களை கையகப்படுத்தும் திட்டம் மற்றும் ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி ஆகியன, JKF இன் உள்ளடக்கமான, மாற்றியமைப்பு மற்றும் நிலைபேறான விருத்திக்கான உறுதியான எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன.
நிகழ்வில், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்காக குழும தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “2003 ஆம் ஆண்டில் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான பிரிவை நிறுவுவதில் ஜோன் கீல்ஸ் தூர நோக்குடன் செயலாற்றியது. எங்கள் வெற்றிக்கு இரண்டு வலுவான ஆதரவு தளங்கள் இருக்கிறது: குழுவில் உள்ள ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பல ஆண்டுகளாக எங்களுடன் ஒத்துழைத்த கூட்டாளர் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்கடந்த காலங்களில் பதிவு செய்துள்ள தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வலுவூட்டல் கலாசாரத்தினூடாக தேசிய தேவைகளுக்கு மற்றும் முன்னுரிமைகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு வழங்கியுள்ளமையை காண்பதிலும், JKF இன் பயணத்தில் அங்கம் பெறுவதையிட்டும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.” என்றார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின், போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் சரக்கு கையாளல் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரி பேராசிரியர் நிலேஸ் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையுடன், மொரட்டுவ பல்கலைக்கழகம் 19 வருடங்கள் பங்காண்மையை பேணியுள்ளது. இந்த கைகோர்ப்பு தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கல்வி தொடர்பான நோக்கு தொடர்பில் குறிப்பிடுகையில், “தொழில்வாய்ப்பு மற்றும் தொழில்முயற்சியாண்மைக்கு வலுவூட்டல்” என்பதற்கமைய மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அர்த்தமுள்ள வகையில் பல இலக்குகள் எய்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆங்கில மொழி பயிற்சி முகாம் மற்றும் JKF உடனான பங்காண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆலோசனை வழங்கல் திட்டங்கள் மிகவும் பயனளித்திருந்தன.” என்றார்.
நிகழ்வில் உரையாற்றும் போது, இதர பங்காளர்களும் JKF இன் பயணத்தின் முக்கியத்துவங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர். கலா பொல பற்றி கலாநிதி. பிரியந்த உடகெதர உரையாற்றியிருந்ததுடன், தமது கலைப் பயணத்தை கலா பொல உடன் ஆரம்பித்திருந்ததுடன், தற்போது ஒரு சிரேஷ்ட கலைஞராகவும், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் பீட அங்கத்தவராகவும், ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையின் காப்பாளராகவும் திகழ்கிறார். ஆசிய அறக்கட்டளையின் பாலினம் மற்றும் நீதி பணிப்பாளர் கலாநிதி. ரமணி ஜயசுந்தரி Project WAVE பற்றிய முக்கியமான விடயங்களை பகிர்ந்திருந்தார். பாலின வன்முறைகளுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தவிர்த்தல் தொடர்பில் இலங்கையின் கூட்டாண்மை நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது நடவடிக்கையாக, JKF இன் Project WAVE 10 வருட கால செயற்திட்டமாக அமைந்துள்ளது.
புத்தாக்க தொழிற்துறைகளின் முக்கியத்துவம் தொடர்பில் சன்ன தஸ்வத்த குறிப்பிட்டதுடன், நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகம், இலங்கை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளினூடாக அந்தத் துறையின் வளர்ச்சிக்க JKF ஆற்றியுள்ள பங்களிப்பு பற்றியும் தெரிவித்தார். தர உறுதிப்படுத்தல்தர உறுதிப்படுத்தல்/நிலைபேறாண்மை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உபதலைவர் மற்றும் விருந்தோம்பல் பிரிவின் தரவு பிரத்தியேகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு பிரிவின் ஒழுங்கிணைப்பாளர் ஷானேஸ் விஜேசிங்க, சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் உடன் JKF முன்னெடுத்திருந்த உயிரியல் பரம்பல் கைகோர்ப்பு செயற்பாடுகள் மற்றும் ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி ஊடாக முன்னெடுக்கப்பட்ட நிலைபேறான சமூக வலுவூட்டல் செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதர நிகழ்வுகளில், கலா பொலவில் நீண்ட காலமாக பங்கேற்கும் பிரகீத் மனோஹன்ஸவின் கலைப் படைப்பு நிறுவப்பட்டிருந்ததுடன், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை தொடர்பான விவரண வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது.
கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரம், சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை மற்றும் உயிரியல் பரம்பல் ஆகியவை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நான்கு (மறுவகைப்படுத்தப்பட்ட) கவனம் செலுத்தும் பகுதிகளாகும் - இது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்) இன் சமூக பொறுப்புணர்வு அமைப்பாகும். இது 7 மாறுபட்ட தொழில் துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 16,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் கடந்த 19 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மையில் ஜேகேஎச் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக இருக்கும் Plasticcycle என்ற சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும், எதிர்காலத்துக்காக தேசத்தை வலுப்படுத்துதல் என்ற அதன் சமூகப் பொறுப்புணர்வு தொலைநோக்குப் பார்வைக்கமைய ஜே.கே.எச் இயக்குகிறது.

