Apr 29, 2025 - 03:34 PM -
0
சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக சீன ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இன்று மதியம் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
சீனாவில், ஊழியர்கள் பாதுகாப்பு அம்சங்களை புறக்கணிப்பதால், தொழில்துறை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த துயர சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்குமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

