Apr 29, 2025 - 03:39 PM -
0
போதைப் பொருட்களுக்கு எதிராகத் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மற்றும் அதனால் தேசத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை ஒழிப்பதில் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதில் தடம் பதித்துள்ள துறைசார் முன்னணி கழிவு முகாமைத்துவத் தீர்வு வழங்குனரான INSEE Ecocycle Lanka (தனியார்) நிறுவனம் பறிமுதல் செய்யப்பட்ட 494.048 கிலோ கிராம் ஹொரோயினை இணை செயலாக்கத் தொழில்நுட்பத்தின் ஊடாக பொறுப்பான முறையில் அகற்றுவதற்கு இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை என்பவற்றுடன் மீண்டும் ஒருமுறை இணைந்துகொண்டது.
2018, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஏறத்தாழ 1804 கிலோ கிராம் அபாயகர போதைப்பொருட்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து INSEE Ecocycle நிறுவனம் சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரசபைகளுடன் இணைந்து ஏற்படுத்திய நான்காவது கூட்டாண்மையாக இது அமைந்தது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றம் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் கடுமையான கண்காணிப்பின் முன்னநிலையில் புத்தளத்தில் உள்ள சீமெந்துத் தொழிற்சாலையில் ஏப்ரல் 28 ஆம் திகதி சுற்றுச் சூழலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்ரூபவ் பாதுகாப்பான முறையில் இந்தப் போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப் பொருட்கள் அழிக்கப்படுவதற்கு முன்னர் அவை சட்ட மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்குகின்றமை அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம்ரூபவ் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் சட்ட அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டன.
INSEE சீமெந்து ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏக்கநாயக்க விளக்கமளிக்கையில் : 'இந்த விடயத்துக்குத் தீர்வை வழங்கக் கூடிய திறனை உள்ளடக்கிய கொண்ட இலங்கையில் உள்ள ஒரேயொரு ஒன்றிணைந்த சீமெந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையான INSEE சீமெந்து நிறுவனமேன கொண்டுள்ளது. தேசிய நோக்கத்தை வலியுறுத்திரூபவ் போதையற்ற நாட்டை உருவாக்குவதற்கு நாம் பெருமையுடன் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். இலங்கையில் உள்ள சீமெந்து சூளை இணைந்த செயற்பாட்டு வசதியைக் கொண்ட தொழிற்சாலையாக எமது புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலை விளங்குகின்றது. எமது அனைத்துப் பங்குதாரர்களினதும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பிலேயே INSEE சீமெந்து எப்போதும் கவனம் செலுத்துகின்றது. பொறுப்பு வாய்ந்த கூட்டு நிறுவனம் என்ற ரீதியில்ரூபவ் மிகுந்த கவனத்துடன் தொழிர்சார் நிபுணத்துவத்துடன் தீங்குவிளைவிக்கும் பொருட்களைப் பாதுகாப்பாக அழிப்பதை உறுதிசெய்வதில் எமது ஆதரவை வழங்குவதையிட்டு நாம் பெருமையடைகின்றோம்' என்றார்.
இந்த முயற்சியின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட INSEE Ecocycle நிறுவனத்தின் பணிப்பாளர் சுஜித் குவணர்தன 'இணைந்த செயற்பாட்டுத் தொழில்நுட்பத்தை இலங்கையில் வழங்கும் ஒரேயொரு நிறுவனம் என்ற ரீதியில் இந்த முக்கியமான முயற்சியில் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதையிட்டுப் பெருமை கொள்கின்றோம். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அனைத்து ஒழுங்குவிதிகளுக்கும் அமைய சுற்றுச் சூழலுக்கு நட்பான மற்றும் நிலைபேறான முறையில் நாம் வெற்றிகரமாக அளித்துள்ளோம். இணைந்த செயற்பாடு மிக அதிகமான வெப்பநிலையில் அபாயகரமான கழிவுகளை முழுமையாக அழிக்கும் தீர்வை வழங்குவதுடன் தீங்குவிளைவிக்கும் புகைவெளியேற்றம் அல்லது துணைப்பொருட்கள் எஞ்சுவதை நீக்குகின்றது. இது பாரம்பரியமாக எரியூட்டப்படுவதை விட நிலைபேறான மற்றும் சுத்தமான தீர்வாக அமைகின்றது. இதுவே சிறந்த கழிவு முகாமைத்துவ முறையாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன்ரூபவ் இது பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைத்து நிலையான கழிவு முகாமைத்துவத்தில் உளகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு இணங்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.
அபாயகரமான பொருட்கள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி உள்ளிடும் பொறிமுறை மற்றும் செயலாக்கத்திற்கான முன்னரான நடவடிக்கைகளில் தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற்கொள்வதில் INSEE Ecocycle நிறுவனம் முக்கிய பங்காற்றியது. இடர் மதிப்பாய்வு மற்றும் தடுப்பதற்கான திட்டங்கள் வரையில் விரிவான மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன் செயற்பாட்டுக்கு முன்னரான நடவடிக்கைகள் மற்றும் இணை செயற்பாட்டு பெறுமதிச் சங்கிலி ஆகியவற்றுக்கான சுற்றாடல், சமூக, சுகாதார மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளையும் இது நிவர்த்தி செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின்களை அழிக்கும் செயற்பாட்டின்போது பொலிஸ் போதைப்பொருட் தடுப்புப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் நிபுணர்கள் உரிய வழிகாட்டல்களை வழங்கினர். அத்துடன்ரூபவ் ஆய்வக பகுப்பாய்வுகள் மற்றும் நடைமுறை பின்பற்றுதல் உட்பட போதைப் பொருளின் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான அழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
சீமெந்து சூளை இணைந்த செயற்பாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1800-2000 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் 4-6 செக்கன் நேரத்தில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட அளவுருக்களின் கீழ் இந்த அழிப்பு இடம்பெற்றது.
கழிவு முகாமைத்துவத்திற்காக உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேவைகள் மற்றும் தொழில்நுட்பத் தரங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் INSEE இன் இணைந்த செயற்பாட்டு வசதி அமைந்துள்ளது. இதனால் வழங்கப்படும் தீர்வின் மூலம் பாதிப்பான வாயு வெளியேற்றம் பூச்சியமாக இருக்கும். மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் மாகாண சுற்றுச்சூழல் அதிகாரசபையிடமிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் மற்றும் கழிவு முகாமைத்துவ அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டிருப்பதுடன் ISO 9001, ISO 14001, ISO 17025, ISO 39001 மற்றும் ISO 45001 ஆகிய சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான பெருமைமிக்க பாரம்பரியத்தைக் கொண்டுள்ள INSEE Ecocycle நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டுக் கூட்டு நிறுவனங்கள் மத்திய மற்றும் மாகாகாண அரச அதிகாரசபைகள் மற்றும் மீள்சுழற்சிப் பங்காளர்கள் உள்ளடங்கலாக 100 ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் இணைந்து 1.3 மில்லியன் மெற்றித்தொன்களுக்கும் அதிகமான தொழில்துறைக் கழிவுகளை முகாமைத்துவம் செய்கின்றது. இலங்கையின் சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் மேலாண்மையை மேம்படுத்துவதில் நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இந்தக் கூட்டாண்மை எடுத்துக் காட்டுகின்றது.

