சினிமா
வசூல் வேட்டையில் மோகன்லாலின் 'துடரும்' படம் - இரண்டாம் நாள் வசூல் நிலவரம்

Apr 29, 2025 - 03:45 PM -

0

வசூல் வேட்டையில் மோகன்லாலின் 'துடரும்' படம் - இரண்டாம் நாள் வசூல் நிலவரம்

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா 'துடரும்' படத்தில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு இது 360ஆவது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள். 

துடரும் திரைப்படத்தை தருன் மூர்த்தி இயக்கியுள்ளார். தரூண் மூர்த்தி இதற்கு முன் ஆப்ரேஷன் ஜாவா படத்தை இயக்கியவர் ஆவார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

மோகன்லால் கடந்த சில ஆண்டுகளில் வெளியான மலைக்கோட்டை வாலிபன், பரோஸ் , எம்புரான் ஆகிய திரைப்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் துடரும் படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார் என கூறலாம். 

இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 40 கோடி ரூபா (இந்திய பெறுமதி) வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் கூடுதலாக பல கோடிகள் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05