Apr 29, 2025 - 03:50 PM -
0
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) முன்னாள் துணைத் தலைவர் எல். ஏ. விமலரத்னவை பிணையில் விடுவிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
விமலரத்ன இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டார்.
கதிர்காமத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடு ஒன்று தொடர்பான விசாரணைகளுடன் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதை அடுத்து, சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி அவரை விடுவிக்க உத்தரவிட்டது.

