வணிகம்
தீபாலை அறிமுகப்படுத்துகின்றன செனொக் மற்றும் ஷங்கன் : முதற்தர மின்சார வாகனங்கள் இலங்கைக்கு வருகை

Apr 29, 2025 - 04:11 PM -

0

தீபாலை அறிமுகப்படுத்துகின்றன செனொக் மற்றும் ஷங்கன் : முதற்தர மின்சார வாகனங்கள் இலங்கைக்கு வருகை

புத்தாக்கமான வாகன தயாரிப்பில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட, 160 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட முன்னணி நிறுவனமான ஷங்கன் ஓட்டோமொபைல் (Changan Automobile), செனோக் (Senok) உடனான பிரத்தியேக கூட்டாண்மை மூலம் இலங்கை சந்தைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. ஷங்கன் நிறுவனமானது, சீனாவின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் மற்றும் அறிவார்ந்த இயக்கத்தின் முன்னோடியாகும். இது, அதன் விரிவான ஆய்வு, மேம்பாட்டு திறன்கள் மற்றும் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் பொறியியல் கட்டமைப்பை உள்ளூர் வீதிகளுக்கு கொண்டுவருகின்றது. 

இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய வாகன விநியோகஸ்தரான செனொக், ஷங்கனின் முதற்தர மின்சார வாகன வகையான தீபாலை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்றது. வாகனங்களுக்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, முதலாவது தொகுதி வாகனங்கள் 2025 மே மாதம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஷங்கனின் கீழ் 2023ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தீபால். இது, நிறுவனத்தின் புதிய சக்திவள பிரிவின் பலவருட கால முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டதாகும். 

ஆரம்பத்தில், S07, L07, E07, S05, மற்றும் compact Lumin என்ற ஐந்து வகைகளை வழங்குகின்றது. இந்த வகைகள், பல்வேறு விருப்பங்களுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை சுறுசுறுப்பான நகர்ப்புற வாகனங்கள் முதல் சுத்திகரிக்கப்பட்ட, அதிக செயற்திறன் கொண்ட மின்சார வாகனங்கள் வரை உள்ளன. இந்த வாகனங்களின் விலை 6.9 மில்லியன் ரூபாய் முதல் 30 மில்லியன் ரூபாய் வரை உள்ளன. இது வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையில், வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மாற்றுத் தெரிவினை வழங்குகின்றது. தாய்லாந்து மற்றும் நேபாளம் போன்ற பிராந்திய சந்தைகளில் தீபாலின் சாதனையானது, அதன் வலுவான உலகளாவிய நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. தாய்லாந்தில் இந்த வகை, முதலாவது வருடத்திலேயே 10,000 வாகனங்களுக்கு மேல் விற்பனையாகியது. 

நேபாளத்தில், இது BYD வகையை விட அதிகமாக விற்பனையானதோடு, அதிகளவு விற்பனையான மின்சார வாகன வகையாக இடம்பிடித்தது. இந்த வகையின் விரைவான வெற்றியானது அதன் சிறந்த வடிவமைப்பு, ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் கார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யும் சீனாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஷங்கனின் புகழ்பெற்ற பொறியியல் வரலாற்றின் வலுவான நற்பெயர் ஆகியவற்றின் காரணத்தினால் நிகழ்ந்தது. 

செனொக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெராட் பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கையில் : “ஷங்கனுடனான இந்த கூட்டாண்மையானது நிலைபேறுமிக்க இயக்கத்தை நோக்கிய இலங்கையின் நகர்வில் ஒரு முக்கியமான படியாகும். புத்தாக்கமான, செயற்திறனில் கவனம் செலுத்துகின்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான முறையில், சுத்தமான போக்குவரத்தின் எதிர்காலத்தை பிரதிபலிப்பதாக தீபால் அமைகின்றது. தரம் மற்றும் சேவைக்கான செனொக்கின் நீண்டகால அர்ப்பணிப்பால் ஆதரிக்கப்படும் உலகத் தரம் வாய்ந்த மின்சார வாகன அனுபவத்தை இலங்கையர்களுக்கு வழங்குவதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம்” என்றார். 

தீபாலின் வருகையை முன்னிட்டு, அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை செனொக் ஏற்கனவே நிறுவியுள்ளது. முழுமையான உபகரணங்களுடன் கூடிய விற்பனைக்கு பிந்தைய வலையமைப்பு, திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் முழுமையான சேவைகள் என்பன இதில் உள்ளடங்கும். வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக, நாடு முழுவதும் சார்ஜிங் வலையமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது, தடையற்ற உரிமை அனுபவத்தை உறுதிசெய்வதாக அமையும். 

உலகளாவிய வாகன வகைகளை நம்பகத்தன்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்றை செனொக் கொண்டுள்ள நிலையில், இது இலங்கை சந்தையில் தீபால் வகை வாகனத்தின் நுழைவை வழிநடத்த உதவுகின்றது மற்றும் சிந்தனைமிக்க புதிய தலைமுறை சாரதிகளுக்கு எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் போக்குவரத்து முறையை கொண்டுவருகின்றது. கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதி புள்ளிவிபரங்களின்படி, அதற்கு முந்தைய ஆண்டை விட புதிய சக்திவள வாகன விற்பனை 52.8 வீதம் அதிகரித்துள்ளது. இது புத்திசாலித்தனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான போக்குவரத்திற்கான அதிகரித்து வரும் தேவையைக் காட்டுகின்றது. இது ஷங்கனின் சமீபத்திய புள்ளிவிபரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05