Apr 29, 2025 - 05:34 PM -
0
Global Franchise Forum (GFF) இலங்கை அமர்வு, ஏப்ரல் 27 ஆம் திகதி கொழும்பு, Sheraton ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பெருமளவு சர்வதேச வர்த்தக நாமங்கள், முதலீட்டாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வியாபார தலைவர்கள் போன்றவர்கள் பங்கேற்றிருந்தனர். சந்திப்புகள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திய முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
எதிர்பார்க்கப்பட்டதை விட உயர்ந்தளவானோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், பரந்தளவு பார்வையாளர்கள் வரவேற்கப்பட்டனர். விருந்தோம்பல், விற்பனை, சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற துறைகளின் அங்கத்தவர்கள் பங்கேற்றதுடன், அவர்களுடன் தொழில்முயற்சியாளர்கள், வளர்ச்சியில் கவனம் செலுத்தும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் தீர்மானமெடுப்போரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த அமர்வு இந்தியா-இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை தேசிய வர்த்தக தொழிற்துறை சம்மேளனம் (CNCI), இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICC), கொழும்பு வர்த்தக சம்மேளனம், இலங்கை வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனங்களின் ஒன்றியம் (FCCISL) மற்றும் இந்திய சிறிய வியாபார மற்றும் Franchise சம்மேனளம் (ISFA) ஆகியன பங்காளர்களாக நிகழ்வுக்கு ஆதரவளித்திருந்ததுடன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சர்வதேச franchise விருத்தியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்கியிருந்தன.
Franchise India Group இன் தவிசாளர் கௌரவ் மர்யா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்களிடமிருந்து கிடைத்திருந்த வரவேற்பு தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த அமர்வு ஒரு நிகழ்வு என்பதற்கு அப்பாற்பட்டது. சிந்தனைகள், சந்தைகள் மற்றும் வாய்ப்புகளின் சந்திப்பாக அமைந்திருந்தது. இலங்கையின் தொழில்முயற்சியாளர்கள் சர்வதேச வர்த்தக நாமங்களை பின்பற்றி, நோக்குடன் செயலாற்றுவதற்கு காண்பிக்கும் தயார்நிலை மற்றும் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகளை நிகழ்வின் போது வெளிப்பட்டிருந்த ஆர்வம் காண்பித்திருந்தது.” என்றார்.
தெற்காசியாவிற்கான நுழைவாயிலாக இலங்கை தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, வளர்ந்து வரும் நுகர்வோர் தளம், உலகளாவிய வர்த்தக நாமங்களுக்கான அதிகரித்து வரும் தேவை மற்றும் முதலீட்டிற்கான உகந்த கொள்கை சூழல் போன்றவற்றுடன் இந்த அமர்வு வாக்குறுதியை எடுத்துக்காட்டுகிறது. இந்த நாளில் முன்னணி உலகளாவிய வர்த்தக நாமங்களுடன் franchise காட்சிப்படுத்தல், முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட வணிகக் கூட்டங்கள் மற்றும் உரிமையாளர் சிந்தனைத் தலைவர்களின் வளமான அறிவுப் பகிர்வு அமர்வுகள் இடம்பெற்றன.
கௌரவ் மேலும் குறிப்பிடுகையில், “பொருளாதார மீட்சியை நோக்கி இலங்கை தெளிவாக நகர்கின்றது. அண்மைய வர்த்தக கொள்கை மாற்றங்கள் காணப்பட்ட போதிலும், Global Franchise Forum 2025 இலங்கை அமர்வினூடாக, காலத்துக்கான உரையாடல்களை வெளிக் கொண்டு வரவும், நீண்ட கால பொருளாதார விருத்தி மற்றும் மீட்சிக்கு ஆதரவளிக்கும் நிலைபேறான பங்காண்மைகளை கட்டியெழுப்பவும் உதவியாக அமையும்.” என்றார்.
பங்கேற்பாளர்கள் அர்த்தமுள்ள நேரடி விவாதங்களில் ஈடுபட்டதுடன், சாத்தியமான ஒத்துழைப்புகளை உருவாக்கியிருந்தனர், மேலும் franchise விரிவாக்க உத்திகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் பட்டறைகளிலிருந்து மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற்றனர். franchise சுற்றுச்சூழல் அமைப்பினுள் சிறப்பையும் புதுமையையும் கொண்டாடும் ஒரு நேர்த்தியான விருதுகள் இரவோடு மாலைப் பொழுது நிறைவடைந்தது.
பங்கேற்றிருந்த வர்த்தக நாமங்களில், Freshco Soda, U Clean, The Chocolate Room, Naturals Salon, Yala Begum, B2B Networks, Top Up Goli Soda, Hay Womens wear, Remarko Bakers, Total Clean, Karims, ISAS, DVE Automation, Franks, ThreeO clock, ActionCOACH போன்றன அடங்கியிருந்தன.
The Global Franchise Forum 2025 – இலங்கை அமர்வு, franchise விருத்தி, தொழில் உருவாக்கம் மற்றும் குறுக்கு எல்லை கைகோர்ப்பு போன்றவற்றுக்கான பங்களிப்பை மீளுறுதி செய்திருந்தது. தெற்காசிய பிராந்தியத்தில் விறுவிறுப்பான, முதலீட்டுக்கு தயாரான வியாபார மையமாக இலங்கையை திகழச் செய்கின்றமையை உணர்த்தியிருந்தது.

