பல்சுவை
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

Apr 30, 2025 - 11:11 AM -

0

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

இந்தியாவில் தங்கம் விலை கடந்த 22 ஆம் திகதி ஒரே நாளில் 2,200 ரூபா உயர்ந்து, சவரன் 74,320 ரூபா இமாலய உச்சத்தை எட்டியது.

 

இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23 ஆம் திகதி, சவரன் 2,200 ரூபா குறைந்து, மீண்டும் 72,120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24 ஆம் திகதி ஒரு சவரன் 80 ரூபா குறைந்து 74,040 ரூபாவுக்கு விற்கப்பட்டது. பின்னர், 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது.

 

இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் 65 ரூபாவும், ஒரு சவரன் 520 ரூபாவும்,  குறைந்து, முறையே, ஒரு கிராம் 8,940 ரூபாவுக்கும், ஒரு சவரன் 71,520 ரூபாவுக்கும் விற்பனையானது.

 

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,980, சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.

 

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05