செய்திகள்
கோடிக்கணக்கில் சொத்துக்களை கையகப்படுத்திய பெண் கைது

Apr 30, 2025 - 05:37 PM -

0

கோடிக்கணக்கில் சொத்துக்களை கையகப்படுத்திய பெண் கைது

போலி ஆவணங்களைத் தயாரித்து சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களைப் கையகப்படுத்திய பெண் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்ற விசாரணை பிரிவு கைது செய்துள்ளது. 

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர் கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

அவர் ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் சார்ஜென்ட் என்றும் கூறப்படுகிறது. 

சந்தேக நபர் நேற்று (29) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வணிக குற்ற விசாரணை பிரிவால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05