ஜோதிடம்
ஜென்ம நட்சத்திர பலன்கள்

May 1, 2025 - 11:24 AM -

0

ஜென்ம நட்சத்திர பலன்கள்

அஸ்வினி: நெருக்கமான நண்பரிடம் மனதில் உள்ளதைக் கொட்டுவீர்கள்.

 

பரணி: புதிய வேலையில் சேர்வது குறித்து சிந்திப்பீர்கள்.

 

கார்த்திகை: வம்பு வழக்குகளில் சம்பந்தப்படாமல் இருப்பது நல்லது.

 

ரோகிணி: நீங்கள் மதிக்கும் நபர் உங்களைப் பாராட்டுவார்.

 

மிருகசீரிடம்: நெருங்கிய உறவினர் வெளிநாடு போக பணம் கொடுப்பீர்கள்.

 

திருவாதிரை: பழைய கடனை அடைத்து புதிய லோன் வாங்குவீர்கள்.

 

புனர்பூசம்: வியாபாரத்திற்குத் தேவையான வியூகங்களை வகுப்பீர்கள்.

 

பூசம்: நின்றுபோன திருமணத்தை சாமர்த்தியமாகப் பேசி நடத்துவீர்கள்.

 

ஆயில்யம்: மற்றவர்களுக்கு உதவி செய்து மரியாதையை உயர்த்துவீர்கள்.

 

மகம்: தானாக வரும் கடனை வாங்காமல் தவிர்த்து விடுவது நல்லது.

 

பூரம்: உங்கள் உயர்வான நிலையைக் கண்டு உறவுகள் தானாக வந்து சேரும்.

 

உத்திரம்: பழித்துப் பேசும் செயல்களில் இறங்காமல் பக்குவமாக இருங்கள்.

 

அஸ்தம்: உடைந்து போன உறவுகளை ஒட்டவைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

 

சித்திரை: புதிய ஆர்டர்கள் பெற்று பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள்.

 

சுவாதி: வாக்கு வன்மையால் மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

 

விசாகம்: பெருந்தன்மையான செயலால் குடும்பச் சிக்கலை நீக்குவீர்கள்.

 

அனுஷம்: அறிமுகம் இல்லாதவரின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.

 

கேட்டை: பணிச் சுமையைக் குறைக்க உடன் வேலை பார்ப்போர் உதவுவார்கள்.

 

மூலம்: குடும்பத்தில் கலகலப்பான சூழலில் கவலை மறையும்.

 

பூராடம்: மிகுந்த பொறுமையுடன் செய்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

 

உத்திராடம்: வசீகரமான பேச்சால் அனைவரையும் ஈர்ப்பீர்கள்.

 

திருவோணம்: கணக்கைக் கச்சிதமாக எழுதி செலவைக் கட்டுப்படுத்துவீர்கள்.

 

அவிட்டம்: பாசமான நடவடிக்கையால் அனைவரின் நேசத்தைப் பெறுவீர்கள்.

 

சதயம்: பல நாட்கள் இழுபறியாக இருந்த வழக்கு பேச்சுவார்த்தையில் முடியும்.

 

பூரட்டாதி: விட்டுக்கொடுத்துப் போய் மனைவியின் மனதைக் கவர்வீர்கள்.

 

உத்திரட்டாதி: பழைய பாக்கி வசூலாகி பணத்தேவையை பூர்த்தி செய்யும்.

 

ரேவதி: புத்தி கூர்மையால் சிக்கலான வேலையைச் செய்து முடிப்பீர்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05