வடக்கு
இந்தியக் காங்கிரஸ் எம்.பி. மன்னார் வருகை

May 1, 2025 - 03:03 PM -

0

இந்தியக் காங்கிரஸ் எம்.பி. மன்னார் வருகை

இந்தியாவின் தமிழ்நாடு திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான சசிகாந்த் செந்தில் நேற்று (30) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

சிவில் சமூக செயல்பட்டாளர் ஒருவரின் ஏற்பாட்டில் பல்வேறு பொது அமைப்புக்கள், மீனவப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். 

இந்த நிலையில் நேற்று மாலை (30) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் மன்னார் பிரஜைகள் குழுவிற்கு விஜயம் மேற்கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸை சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். 

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05